

இளையராஜா பாடல்களை காப்புரிமை பெறாமல் வெளியிடக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் நிரந்தரத் தடை விதித்துள்ளது.
இது குறித்து இளையராஜா தனது மனுவில் கூறியிருப்பதாவது:
''அகி, எக்கோ இசை நிறுவனங்களுக்கு வழங்கிய காப்புரிமை முடிந்துவிட்டது. காப்புரிமை முடிந்த பின்பும் பாடல்களை வெளியிடுகிறார்கள். தனது பாடலை காப்புரிமை பெறாமல் வெளியிட தடை விதிக்க வேண்டும்'' என்று கூறியிருந்தார்.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுப்பையா இந்த வழக்கை விசாரித்தார். காப்புரிமை பெறாமல் இளையராஜா பாடல்களை வெளியிடவோ, விற்பனை செய்யவோ கூடாது என்று கூறி நிரந்தரத் தடை விதித்து உத்தரவிட்டார்.