தேசிய விருதை கார்த்திக் சுப்புராஜூக்கு சமர்ப்பிக்கிறேன்: சிம்ஹா நெகிழ்ச்சி

தேசிய விருதை கார்த்திக் சுப்புராஜூக்கு சமர்ப்பிக்கிறேன்: சிம்ஹா நெகிழ்ச்சி
Updated on
1 min read

தேசிய விருதுக்கு முழுக்க காரணம் நான் அல்ல... என் நண்பன் கார்த்திக் சுப்புராஜ் தான். இந்த விருதை கார்த்திக் சுப்புராஜூக்கும், 'ஜிகர்தண்டா' குழுவினருக்கும் சமர்ப்பிக்கிறேன் என்று நெகிழ்கிறார் பாபி சிம்ஹா.

62-வது தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் இன்று (செவ்வாய்க்கிழமை) அறிவிக்கப்பட்டது.ஜிகர்தண்டா படத்தில் வில்லனாக நடித்த பாபி சிம்ஹாவுக்கு சிறந்த உறுதுணை நடிகருக்கான விருது கிடைத்துள்ளது. இதுகுறித்து தன் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டார் சிம்ஹா.

''ரொம்ப சந்தோஷமாக இருக்கு. இந்த அளவுக்கு ஒரு பெரிய அங்கீகாரம் கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. தேசிய விருது குழுவினர் அனைவருக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கண்டிப்பாக இந்த விருதுக்கு முழுக்க காரணம் நான் அல்ல... என் நண்பன் கார்த்திக் சுப்புராஜ் தான். இந்த விருதை கார்த்திக் சுப்புராஜூக்கும், 'ஜிகர்தண்டா' குழுவினருக்கும் சமர்ப்பிக்கிறேன்'' என்று நெகிழ்ச்சியுடன் கூறுகிறார் சிம்ஹா.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in