

எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் ஆர்யா, விஜய் சேதுபதி நடித்த 'புறம்போக்கு' திரைப்படம் மே 1-ம் தேதி வெளியாகிறது.
ஆர்யா, விஜய் சேதுபதி, ஷாம், கார்த்திகா நடிப்பில் ஜனநாதன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'புறம்போக்கு'. பாலுவாக ஆர்யாவும், எமலிங்கமாக விஜய் சேதுபதியும், குயிலியாக கார்த்திகாவும், காவல்துறை அதிகாரியாக ஷாமும் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தை யுடிவி நிறுவனத்துடன், எஸ்.பி.ஜனநாதனின் பைனரி பிக்சர்ஸும் சேர்ந்து தயாரித்துள்ளது. ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு வர்ஷன் இசையமைத்துள்ளார்.
ஹிமாச்சலப் பிரதேசம், ராஜஸ்தான், ஆந்திரா, சென்னை ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது. படத்தின் அனைத்து கட்டப் பணிகளும் முடிந்துவிட்டன
இந்நிலையில், 'புறம்போக்கு' திரைப்படத்தின் இசை வெளியீடு ஏப்ரல் முதல் வாரத்தில் நடைபெறுகிறது. திரைப்படம் மே1-ம் தேதி வெளியாகிறது.
இதை யுடிவி தனஞ்ஜெயன் தன் ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். ''ஜனநாதன் படத்தின் எல்லா வேலைகளையும் முடித்துவிட்டார். ரிலீஸ் செய்யத் தயாராகிவிட்டோம். மே 1-ல் 'புறம்போக்கு' படத்தை ரிலீஸ் செய்கிறோம்'' என்று தனஞ்ஜெயன் அறிவித்துள்ளார்.