Published : 24 Mar 2015 04:29 PM
Last Updated : 24 Mar 2015 04:29 PM

தேசிய விருதுகள்: சிறந்த தமிழ்ப் படம் குற்றம் கடிதல், சிறந்த உறுதுணை நடிகர் பாபி சிம்ஹா

அறிமுக இயக்குநர் பிரம்மாவின் 'குற்றம் கடிதல்', சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருதை வென்றுள்ளது. 'ஜிகர்தண்டா' படத்துக்காக, சிறந்த உறுதுணை நடிகராக பாபி சிம்ஹா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

62-வது தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் இன்று (செவ்வாய்க்கிழமை) அறிவிக்கப்பட்டது.

இதில், பள்ளிக் கல்வித் துறையின் சீர்திருத்தம், ஆசிரியர் - மாணாக்கர் உறவு, தவறு செய்யும் மாணவர்களைத் திருத்துவதற்கான நடவடிக்கைகள் உள்ளிட்டவற்றில் பல்வேறு விவாதங்களைத் தூண்டக் கூடிய 'குற்றம் கடிதல்' எனும் படம், சிறந்தத் தமிழ்ப் படத்துக்கான விருதை வென்றுள்ளது.

சிறந்த பாடலாசிரியருக்கான விருதை நா.முத்துக்குமார் பெறுகிறார். 'சைவம்' படத்துக்கு பாடல் எழுதியதற்காக இந்த விருது வழங்கப்படுகிறது.

'ஜிகர்தண்டா' எடிட்டர் விவேக் ஹர்ஷனுக்கு சிறந்த படத்தொகுப்பாளருக்கான விருது கிடைத்துள்ளது.

சிறந்த குழந்தைகளுக்கான படமாக, தமிழ்த் திரைப்படமான 'காக்கா முட்டை' தேர்வு செய்யப்பட்டுள்ளது.

'ஜிகர்தண்டா'வில் நடித்த பாபி சிம்ஹாவுக்கு சிறந்த உறுதுணை நடிகருக்கான விருது கிடைத்துள்ளது.

உன்னி கிருஷ்ணன் மகள் உத்ரா உன்னிகிருஷ்ணன் சிறந்த பாடகிக்கான விருது பெற்றுள்ளார். இவர் 'சைவம்' படத்தில் அழகே அழகு பாடலைப் பாடினார்.

சினிமா குறித்த சிறந்த எழுத்துக்கான விருது (பிரைட் ஆஃப் தமிழ் சினிமா) ஜி.தனஞ்செயனுக்கு வழங்கப்படுகிறது.

முக்கிய விருதுகளை வென்றுள்ள குற்றம் கடிதல் மற்றும் காக்கா முட்டை ஆகிய திரைப்படங்கள் இன்னும் திரையரங்கில் வெளியாகவில்லை. எனினும், பல்வேறு திரைப்பட விழாக்களில் கவனத்தை ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.

சிறந்த நடிகர் விஜய்... சிறந்த நடிகை கங்கனா ரணவத்

கன்னட படமான 'நான் அவனல்ல அவளு'வில் நடித்த விஜய், சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெறுகிறார். 'குயின்' படத்தில் நடித்த கங்கனா ரணவத்துக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்துள்ளது.

சிறந்த பொழுதுபோக்கு திரைப்படமாக ப்ரியங்கா சோப்ரா நடித்த 'மேரிகோம்' தேர்வு செய்யப்பட்டுள்ளது. மராத்திய மொழி திரைப்படம் 'கோர்ட்' சிறந்த திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

தேசிய விருதுகள் பட்டியல்

சிறந்த படம்: கோர்ட் (மராத்தி)

சிறந்த இயக்குநர்: ஸ்ரீஜித் முகர்ஜி (சோட்டூஷ்கோனே, வங்காளம்)

சிறந்த தமிழ்ப் படம்: குற்றம் கடிதல்

சிறந்த இந்தி படம்: குயின்

சிறந்த நடிகை: கங்கனா ரனவத் (குயின், இந்தி)

சிறந்த நடிகர்: விஜய் (நானு அவனல்ல அவளு, கன்னடம்)

சிறந்த உறுதுணை நடிகர்: பாபி சிம்ஹா (ஜிகர்தண்டா, தமிழ்)

சிறந்த உறுதுணை நடிகை: பல்ஜிந்தேர் கவுர் (பக்டி தி ஹானர், ஹரியானாவி)

சிறந்த பொழுதுபோக்கு திரைப்படம்: மேரி கோம் (இந்தி)

சினிமாவைப் பற்றி சிறந்த புத்தகம்: சைலண்ட் சினிமா: (1895 - 1930), பசுபுலெடி பூர்ணசந்திர ராவ்

சினிமாவைப் பற்றி சிறந்த புத்தகம் (சிறப்புத் தேர்வு) - ப்ரைட் ஆஃப் தமிழ் சினிமா, ஜி.தனஞ்செயன்

சிறந்த சினிமா விமர்சகர் - தனுல் தாகூர்

சிறந்த குறும்படம் - மித்ரா

சிறந்த இசை - பாடல்கள்: விஷால் பரத்வாஜ், ஹைதர் (இந்தி)

சிறந்த இசை - பின்னணி இசை: கோபி சுந்தர், 1983 (மலையாளம்)

சிறந்த பின்னணிப் பாடகி: உத்தரா உன்னி கிருஷ்ணன், பாடல் - அழகே (சைவம், தமிழ்)

சிறந்த பின்னணிப் பாடகர்: சுக்விந்தர் சிங் பாடல் - பிஸ்மில், (ஹைதர், இந்தி)

சிறந்த நடன அமைப்பு: ஹைதர் (பாடல்: பிஸ்மில், இந்தி)

சிறந்த அனிமேஷன் திரைப்படம்: சவுண்ட் ஆஃப் ஜாய்

சிறந்த புலனாய்வுத் திரைப்படம்: ஃபும் ஷாங்

சிறந்த சாகசத் திரைப்படம்: இன்டியாஸ் வெஸ்டர்ன் காட்ஸ்

சிறந்த கல்வித் திரைப்படம்: கோமல் & பிஹைண்ட் தி கிளாஸ்

சிறந்த ஆடை வடிவமைப்பு: டாலி அஹ்லுவாலியா (ஹைதர், இந்தி)

சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்திய சிறந்த படம்: ஒட்டால் (மலையாளம்)

சிறந்த புதுமுக இயக்குநருக்கான இந்திரா காந்தி விருது: ஆஷா ஜாவோர் மாஜே - வங்காளம்

சிறந்த திரைப்படம், சிறப்பு தேர்வு - மொழி வாரியாக:

சிறப்பு விருதுக்கான படங்கள்:

ஐன் (மலையாளம்)

நச்சோம் - ஐஏ கும்பசார் (கொங்கனி)

கில்லா (மராத்தி)

பூத்நாத் ரிடர்ன்ஸ் (இந்தி)

மாநில மொழி சிறந்த படங்கள்:

குயின் - இந்தி

பஞ்சாப் 1984 - பஞ்சாபி

குற்றம் கடிதல் - தமிழ்

சந்தாமாமா கதலு - தெலுங்கு

ஐன் - மலையாளம்

கில்லா - மராத்தி

ஆதிம் விசார் - ஒடியா

ஹரிவு - கன்னடம்

ஐஏ கும்பசார் - கொங்கனி

ஒதெல்லோ - அசாமீஸ்

நிர்பஷிடோ - வங்காளம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x