

மணிரத்னம் இயக்கத்தில் உருவான 'ஓ காதல் கண்மணி' திரைப்படம் ஏப்ரல் 10-ல் ரிலீஸ் ஆகிறது.
'கடல்' படத்துக்குப் பிறகு மணிரத்னம் இயக்கியுள்ள படம் 'ஓ காதல் கண்மணி'. முழுக்க முழுக்க காதலை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தில் ஹீரோவாக துல்கர் சல்மானும், ஹீரோயினாக நித்யா மேனனும் நடித்துள்ளனர்.
பிரகாஷ்ராஜ், கனிகா ஆகிய இருவரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ள இத்திரைப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் தயாரித்துள்ளது. இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்துள்ளார். வைரமுத்து பாடல்களை எழுதியுள்ளார்.
சமீபத்தில் 'ஓ காதல் கண்மணி' திரைப்படத்தின் மென்டல் மனதில் பாடல் டீஸர் வெளியிடப்பட்டது. படத்தின் இசை வெளியீட்டு விழாவை விரைவில் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
'ஓ காதல் கண்மணி' திரைப்படம் ஏப்ரல் 10ல் வெளியாகிறது. இதே நாளில், ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில், கமல் நடிப்பில் உருவான 'உத்தம வில்லன்' திரைப்படமும் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.