

கடும் முயற்சி எல்லாம் பண்ணாதீங்க.. இப்படியே பண்ணுங்க என்று சிவகார்த்திகேயனுக்கு நடிகர் அஜித் அறிவுரை அளித்துள்ளார்.
'காக்கி சட்டை' படத்துக்கு கிடைத்திருக்கும் வரவேற்பால் பெரும் உற்சாகத்தில் இருக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன். 'ரஜினி முருகன்' படத்தைத் தொடர்ந்து, நடிக்கவிருக்கும் படத்துக்காக கதைகளைக் கேட்டு வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் அஜித் தனக்கு வழங்கிய அறிவுரையை சிவகார்த்திகேயன் பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.
நிகழ்ச்சி ஒன்றில் அஜித்தும் சிவகார்த்திகேயனுக்கு சந்தித்திருக்கிறார்கள். அப்போது அஜித் சிவகார்த்திகேயனிடம், "நீங்க நல்லா பண்ணிட்டு இருக்கீங்க. வாழ்த்துகள்" என அஜித் தெரிவிக்க அதற்கு "கடும் முயற்சி பண்ணிட்டு இருக்கேன் சார்" என்று சிவகார்த்திகேயன் கூறியிருக்கிறார். "அதெல்லாம் பண்ணாதீங்க. இப்படியே பண்ணுங்க.. நல்லா வருவீங்க" என்று தெரிவித்திருக்கிறார் அஜித்.
அஜித் தன் மீது அக்கறை கொண்டு சொன்ன அறிவுரையால் நெகிழ்ந்து போனாராம் சிவகார்த்திகேயன்.