

கமல்ஹாசன் நடிப்பில் 'உத்தம வில்லன்' படம் வெளியீட்டுக்கு தயாராக இருக்க, தனது அடுத்த பட வேலைகளை கமல் துவக்கியுள்ளார்.
த்ரில்லர் படமாக உருவாகவுள்ள இதை கமல்ஹாசனே இயக்குவார் எனத் தெரிகிறது. மொரீஷியஸ்ஸில் படப்பிடிப்புக்கான இடங்களைத் தேர்ந்தெடுத்துவிட்டு அவர் திரும்பியுள்ளார் என்று கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
'உத்தம வில்லன்' வெளியான பிறகு புதுப் படத்தின் வேலைகள் முழுவீச்சில் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே வேளையில், பாலிவுட்டைச் சேர்ந்த விரேந்தர் அரோரா மற்றும் அர்ஜூன் கபூர் தயாரிப்பில் முழு நீள இந்திப் படம் ஒன்றிலும் கமல் நடிப்பார் என்று தெரிகிறது. இது அரசியல் சம்பந்தப்பட்ட படமாக உருவாகவுள்ளது.
கமல் நடிப்பில் 'பாபநாசம்' மற்றும் 'விஸ்வரூபம் 2'-ஆம் பாகம் ஆகிய படங்களும் வெளியீட்டுக்கு காத்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.