Last Updated : 21 Mar, 2015 11:40 AM

 

Published : 21 Mar 2015 11:40 AM
Last Updated : 21 Mar 2015 11:40 AM

ஜூலை 17ம் தேதி வெளியாகிறது ரஜினி முருகன்

சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகி வரும் 'ரஜினி முருகன்' திரைப்படம் ஜூலை 17ம் தேதி வெளியாகும் என அறிவிப்பு

'காக்கி சட்டை' படத்தைத் தொடர்ந்து பொன்.ராம் இயக்கி வரும் 'ரஜினி முருகன்' படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். கீர்த்தி சுரேஷ், சூரி, ராஜ்கிரண், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் சிவகார்த்திகேயனோடு நடித்து வருகிறார்கள். இமான் இசையமைத்து வரும் இப்படத்தை திருப்பதி பிரதர்ஸ் தயாரித்து வருகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிந்திருக்க வேண்டியது. ஆனால், நாயகி கீர்த்தி சுரேஷிற்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. மார் 23ம் தேதி முதல் ஏப்ரல் 17ம் தேதி வரை இறுதி கட்டப் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.

'ரஜினி முருகன்' ஜூன் மாதம் வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகி வந்தன. ஆனால் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் படம் எப்போது வெளியாகும் போன்றவை உள்ளிட்ட விவரங்களை அறிவித்திருக்கிறது.

"ஏப்ரல் 25ம் தேதி படத்தின் பர்ஸ்ட் லுக், ஜூன் 7ம் தேதி இசை வெளியீடு, ஜூலை 17ம் தேதி படம் வெளியாகும்" என்று திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. ஜூலை 17ம் தேதி ரம்ஜான் விடுமுறைகளை கணக்கில் கொண்டு அந்த தேதியை முடிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x