விஷால் அண்ணனாக நடிக்கும் சமுத்திரக்கனி

விஷால் அண்ணனாக நடிக்கும் சமுத்திரக்கனி
Updated on
1 min read

சுசீந்திரன் இயக்கும் பெயரிடப்படாத படத்தில் விஷாலுக்கு அண்ணனாக சமுத்திரக்கனி நடிக்கிறார்.

'பாண்டியநாடு' வெற்றிக்குப் பிறகு இரண்டாவது முறையாக சுசீந்திரன் - விஷால் கூட்டணி இணைந்துள்ளது. இப்படத்தில் காஜல் அகர்வால் ஹீரோயினாக நடிக்கிறார்.

விஷால் போலீஸாக நடிக்கும் இப்படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு டி.இமான் இசையமைக்கிறார். வேந்தர் மூவிஸ் மதன் இத்திரைப்படத்தைத் தயாரிக்கிறார்.

இதில் சமுத்திரக்கனி வில்லனாக நடிப்பார் என்று சொல்லப்பட்டது. ஆனால், சமுத்திரக்கனி விஷால் அண்ணனாக நடிக்கிறாராம்.

''சமுத்திரக்கனி சார் வில்லனாக நடிக்கவில்லை. என் அண்ணனாக நடிக்கிறார்'' என்று விஷால் தன் ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

சமுத்திரக்கனி 'மாஸ்', 'ரஜினி முருகன்' ஆகிய இரு படங்களிலும் வில்லனாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in