ட்விட்டரில் இணைந்தார் நடிகர் சூர்யா

ட்விட்டரில் இணைந்தார் நடிகர் சூர்யா
Updated on
1 min read

தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகரான சூர்யா, மகளிர் தினமான இன்று ட்விட்டர் தளத்தில் அதிகாரபூர்வமாக இணைந்துள்ளார்.

தமிழ் திரையுலகில் பல முன்னணி நடிகர்கள், நடிகைகளுக்கு அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கங்கள் இருக்கின்றன. ரஜினி, தனுஷ், சிம்பு, குஷ்பு, ஹன்சிகா என பல்வேறு முன்னணி நட்சத்திரங்கள் தங்களது அன்றாட செய்திகளுக்கு ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்து இருக்கிறார்கள்.

இந்நிலையில், சூர்யா ட்விட்டர் தளத்தில் இணையவிருக்கிறார் என்று செய்திகள் பரவின. ஏற்கெனவே சூர்யா பெயரில் பல்வேறு ட்விட்டர் பக்கங்கள் இருந்தாலும், அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கம் என்பது இதுவரை இல்லை.

முதல் முறையாக ட்விட்டர் தளத்தில் இணைந்திருக்கிறார் சூர்யா. @suriya_offl (Suriya Official) என்ற பெயரில் தனக்கான பக்கத்திற்கு பெயரிட்டு இருக்கிறார்.

முதல் ட்வீட்டாக "என்னுடைய ரசிகர்கள் மற்றும் நலம் விரும்பிகளுக்காக ட்விட்டர் பக்கத்தில் இணைந்து இருக்கிறேன்" என்று தெரிவித்து ஒரு வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோ பதிவில், "உங்கள் அனைவருக்கும் பெண்கள் தின வாழ்த்துகள். ரொம்ப நாளாக வர வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆம். இன்று முதல் ட்விட்டர் தளத்தில் இணைந்திருக்கிறேன். ஏன் எதற்கு என்று கேள்வி எல்லாம் கேட்டீர்கள் என்றால், என்னால் நினைக்க முடிந்ததை விட என் மீது அதிகமாக அன்பு காட்டுகிறீர்கள். அதற்காக மட்டுமே. உங்களது அன்புக்கு நன்றி" என்று பேசியிருக்கிறார் சூர்யா.

சூர்யா ட்விட்டர் தளத்தில் இணைந்திருப்பதை அவரது ரசிகர்கள் #WelcomeSuriyaToTwitter என்ற ஹெஷ்டேக் ஒன்றை உருவாக்கி தங்களது சந்தோஷத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். இந்த ஹெஷ்டேக் இந்தியளவில் ட்ரெண்ட்டாகி வருவது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in