

கௌதம் மேனன் இயக்கும் புதிய படத்தில் விக்ரம் ஹீரோவாக நடிக்கிறார். இத்திரைப்படத்துக்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை.
கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித், த்ரிஷா, அனுஷ்கா நடித்த 'என்னை அறிந்தால்' திரைப்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இப்படம் வரவேற்பைப் பெற்றால் படத்தின் இரண்டாம் பாகத்தினை திட்டமிட்டு இருப்பதாக கெளதம் மேனன் முன்பே தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், சிம்பு, பல்லவி சுபாஷ் நடிக்கும் 'அச்சம் என்பது மடமையடா' படத்தை கௌதம் மேனன் இயக்கி வருகிறார். டான்ஸ் மாஸ்டர் சதீஷ் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது.
இப்படத்தை அடுத்து கௌதம் மேனன் விக்ரமை இயக்க இருக்கிறார். ஹீரோயின் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை. விரைவில், இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவர இருக்கிறது.
விக்ரம் தற்போது விஜய் மில்டன் இயக்கத்தில் '10 எண்றதுக்குள்ளே' படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும், கௌதம் மேனன் படத்தில் நடிக்க உள்ளார்.