

விஷால் - லிங்குசாமி இணையும் 'சண்டக்கோழி' படத்தின் இரண்டாம் பாகம் மே 1ம் தேதி முதல் துவங்க இருக்கிறது.
லிங்குசாமி இயக்கத்தில் விஷால், மீரா ஜாஸ்மின் உள்ளிட்ட பலர் நடிப்பில் பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் 'சண்டக்கோழி'. யுவன் இசையமைத்த இப்படத்தை ஜி.கே நிறுவனம் தயாரித்தது. 2005ம் ஆண்டு இப்படம் வெளியானது.
இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான பணிகளை தற்போது விஷால் மற்றும் லிங்குசாமி இருவரும் துரிதப்படுத்தி இருக்கிறார்கள். 'சண்டக்கோழி' இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு மே 1ம் தேதி முதல் துவங்க இருக்கிறது.
4 மாதங்களில் மொத்த படப்பிடிப்பையும் முடித்து, தீபாவளிக்கு வெளியிட வேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறார்கள். இரண்டாம் பாகத்தினை விஷால் தயாரித்து நடிக்க இருக்கிறார். விஷாலும் நடிக்க இருப்பவர்கள் தேர்வு தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.