இரட்டை வேடத்தில் கலக்கப் போகும் விவேக்: இது அப்பாடக்கர் அப்டேட்

இரட்டை வேடத்தில் கலக்கப் போகும் விவேக்: இது அப்பாடக்கர் அப்டேட்
Updated on
1 min read

சுராஜ் இயக்கத்தில், ஜெயம் ரவி நாயகனாக நடித்து வரும் 'அப்பாடக்கர்' படத்தில், நடிகர் விவேக் இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளார்.

இது குறித்து படக்குழுவைச் சேர்ந்த ஒருவர் கூறும்போது, "இடைவேளைக்கு முந்தைய, பிந்தைய பகுதிகள் என இரண்டு வேடத்தில் விவேக் நடிக்கிறார். ஒரு வேடத்திற்காக மொட்டை அடிக்க வேண்டும் என்று சொன்னபோது சிறிதும் யோசிக்காமல் மொட்டை அடித்துக் கொண்டார். இரண்டும் முற்றிலும் வேறு வேறு பாத்திரங்களாக இருந்தாலும் நகைச்சுவை அதிகமாகவே இருக்கும்".

ஜெயம் ரவி, விவேக், த்ரிஷா, அஞ்சலி ஆகியோர் இந்தப் படத்தில் முக்கிய பாத்திரங்களில் நடித்து வருகின்றனர். எம் குமரன் திரைப்படத்திற்கு பின், விவேக் - ஜெயம் ரவி இணையும் திரைப்படம் இது. காமெடிக்கு புகழ் பெற்ற சுராஜ் இயக்கத்தில், பொள்ளாச்சியை சுற்றியுள்ள பகுதிகளில் தற்போது படப்பிடிப்பு நடந்து வருகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in