

ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் கமல் ஹாசன் நடித்திருக்கும் 'உத்தம வில்லன்' படத்தின் இசை வெளியீடு மார்ச் 1-ல் நடைபெறுகிறது.
'உத்தம வில்லன்' படத்தில் கமல் ஹாசன், ஆண்ட்ரியா, பூஜா குமார், கே. பாலசந்தர், விஸ்வநாத், ஜெயராம், நாசர், ஊர்வசி, எம்.எஸ்.பாஸ்கர், பார்வதி, பார்வதி நாயர், சித்ரா லட்சுமணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
உத்தமன் என்ற 8ம் நூற்றாண்டுக் கூத்துக் கலைஞன் கதாபாத்திரம், மனோரஞ்சன் என்ற 21ம் நூற்றாண்டின் சினிமா உச்ச நட்சத்திரமாக மற்றொரு கதாபாத்திரம் என கமல் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார்.
ரமேஷ் அரவிந்த் இயக்கி இருக்கும் இப்படத்துக்கு கமல் ஹாசன் கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருக்கிறார் . ஜிப்ரான் இசையமைத்துள்ளார். திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்திருக்கிறது.
படப்பிடிப்பு முடித்து இறுதிகட்டப் பணிகள் துவங்கப்பட்டன. ஆனால், படம் எப்போது வெளியாகும் என்று அறிவிக்கப்படாமல் இருந்தது.இந்நிலையில், மார்ச் 1ம் தேதி அன்று இசை வெளியீடு நடத்த திட்டமிட்டுள்ளனர்.
இதை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. 'உத்தம வில்லன்' திரைப்படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.