போட்ட பணத்தை எடுப்பது சினிமாவில் எளிதல்ல!- நேர்காணல்: இயக்குநர் கே.எஸ்.தங்கசாமி

போட்ட பணத்தை எடுப்பது சினிமாவில் எளிதல்ல!- நேர்காணல்: இயக்குநர் கே.எஸ்.தங்கசாமி
Updated on
2 min read

‘‘அந்த ஹீரோவிடம் கதை சொல்லுங்கள். ஓகே என்றால் படப்பிடிப்புக்கு கிளம்புங்கள்.. இப்படிச் சொல்லும் தயாரிப்பாளர்கள்தான் இன்றைக்கு நிறைய தென்படுகிறார்கள். பெரும்பாலான தமிழ் சினிமா, நடிகர்களை நம்பியே இருக்கிறது.

தயாரிப்பாளர்களும் நல்ல கதையா என்றெல்லாம் பார்ப்பதில்லை. ‘ஆர்டிஸ்ட் வேல்யூ’ மட்டுமே பார்க்கிறார்கள். ஆனால், இப்படியெல்லாம் பார்த்துப் பார்த்து எடுத்து 2014-ல் வெளியான பெரிய ஹீரோக்களின் படங்கள் எல்லாம் தயாரிப்பாளருக்கு லாபம் ஈட்டித் தந்ததா? இல்லையே..’’

- தமிழ் சினிமாவின் தற்போதைய சூழல் பற்றி சற்று கோபத்துடன் பேசுகிறார் ‘எட்டுத்திக்கும் மதயானை’ படத்தின் இயக்குநர் கே.எஸ்.தங்கசாமி.

‘ராட்டினம்’ நல்ல பேரை வாங்கிக் கொடுத்ததும், அடுத்த படத்துக்கு 12 தயாரிப்பாளர்கள் என்னை அணுகினர். கமர்ஷியல், காமெடி மட்டும், பெரிய ஹீரோ என்று ஆளுக்கொன்று கூறினார்கள். நான் எடுக்கத் திட்டமிட்டிருந்த கதைக்கு அந்த களங்கள் சரிப்பட்டு வராது என்று தெரிந்தது.

விறுவிறுவென நானே பட வேலைகளைத் தொடங்கிவிட்டேன். அந்த ஓட்டத்தில்தான் ஆர்யா தம்பி சத்யா, ஸ்ரீமுகி, லகுபரண், சாம் ஆண்டர்சன், துர்கா என பலரும் இணைந்தனர்.

நாயகன் சத்யா, படத்தின் புரமோஷன் வேலைகளில் கவனம் செலுத்தவில்லை என்கிறார்களே?

எங்கள் இடையே பிரச்சினை எதுவும் இல்லை. அவர் படத்தின் நாயகன். படத்தை விளம்பரப்படுத்துவதும், பண்ணாததும் அவர் விருப்பம். ஒரு படம் வெற்றி அடைந்தால் அதில் உரிமை கொண்டாட எல்லோருக்கும் பங்கு உண்டு.

அதுவே தோல்வி அடைந்தால் இயக்குநர் மட்டுமே பொறுப்பேற்க வேண்டும். ரசிகர்களை நம்பி படம் எடுக்கிறோம். இந்தப் படத்தை எல்லோரிடமும் கொண்டுபோய் சேர்க்கும் பணியை ‘ஸ்டுடியோ 9’ தயாரிப்பு நிறுவனம் கையில் எடுத்துள்ளது.

முழுக்க கமர்ஷியல் பின்னணியில் புதிய பட வேலைகளைத் தொடங்கிவிட்டீர்களாமே?

கமர்ஷியல், யதார்த்தம், பிரம்மாண்டம் இதை எல்லாம் கடந்து நல்ல சினிமா என்பதுதான் சரியான வெற்றி. கடந்த ஆண்டு வெளியான ‘சதுரங்க வேட்டை’ போன்ற படங்களின் வெற்றிதான் பெரிய வெற்றி.

அந்த வகையில் கலகலப்பாக ஒரு கதையை எழுதி வருகிறேன். கதாபாத்திரத் தேர்வு உள்ளிட்ட பணிகளை எல்லாம் ‘எட்டுத்திக்கும் மதயானை’ ரிலீஸுக்கு பிறகு தொடங்கவேண்டும்.

‘ராட்டினம்’ படத்தில் காதலை வித்தியாசமாக காட்டியிருந்தீர்கள். இந்த படம் எதை நோக்கி பயணிக்கிறது?

‘ராட்டினம்’ திரைப்படம் திருட்டு டிவிடி வழியேதான் அதிக மக்களை போய்ச் சேர்ந்தது. திரையரங்குகளில் இருந்து எடுத்த பிறகு கிடைத்த பாராட்டுகள்தான் அதிகம். ‘எட்டுத்திக்கும் மதயானை’ படத்தை காவல்துறை பின்னணியில் படமாக்கியிருக்கிறோம்.

அதே நாளில் ரிலீஸாகும் ‘காக்கிச்சட்டை’ படமும் போலீஸ் கதைதானே.

‘காக்கிச்சட்டை’ படத்தில் பரவலாக முகம் அறிமுகமான ஹீரோ என்பதால் கமர்ஷியல், மாஸ் ஆகிய விஷயங்களில் பெரிதாக கவனம் செலுத்தியிருப்பார்கள். ‘எட்டுத்திக்கும் மதயானை’யில் யதார்த்தம் மட்டும்தான் பிரம்மாண்டம்.

சாமானிய மனிதர்களின் பிரச்சினைகளைத்தான் அலசியிருப்போம். தகுதிவாய்ந்த ஒரு பொறுப்பில் இருக்கும் அதிகாரி அந்த பணியின் முக்கியத்தை உணர்ந்து செயல்பட வேண்டும். அவர்கள் தவறுவதால் நிகழ்கிற சமூக அவலங்களை எடுத்துக் காட்டியிருக்கிறோம். இது வித்தியாசமான போலீஸ் பின்னணியாக இருக்கும்.

முதல் படத்தில் இயக்குநர். அடுத்த படத்திலேயே இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் என பல பொறுப்புகளை சுமப்பது ஏன்?

இன்றைக்கு சினிமாவில் உள்ள 20-க்கும் மேற்பட்ட நேரடி கிளைத் தொழில்களில் தயாரிப்பாளர் பணம் போடுகிறார். ஆனால், போட்ட பணத்தை நேரடியாக, எளிதாக எடுத்துவிட முடிகிறதா? அதில் ஏகப்பட்ட சிக்கல்கள், பிரச்சினைகள். இயக்குநராக இருந்த நான், தயாரிப்பாளர் ஆனபிறகு இப்படி பல அனுபவம் கிடைத்திருக்கிறது.

‘ராட்டினம்’ நல்ல பேரை வாங்கிக் கொடுத்ததும், அடுத்த படத்துக்கு 12 தயாரிப்பாளர்கள் என்னை அணுகினர். கமர்ஷியல், காமெடி மட்டும், பெரிய ஹீரோ என்று ஆளுக்கொன்று கூறினார்கள். நான் எடுக்கத் திட்டமிட்டிருந்த கதைக்கு அந்த களங்கள் சரிப்பட்டு வராது என்று தெரிந்தது.

விறுவிறுவென நானே பட வேலைகளைத் தொடங்கிவிட்டேன். அந்த ஓட்டத்தில்தான் ஆர்யா தம்பி சத்யா, ஸ்ரீமுகி, லகுபரண், சாம் ஆண்டர்சன், துர்கா என பலரும் இணைந்தனர்.

இயக்குநர் கே.எஸ்.தங்கசாமி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in