

மலையாளத்தில் ஹிட்டடித்த 'த்ரிஷயம்' தெலுங்கு, கன்னடம், தமிழ் என மூன்று மொழிகளில் ரீமேக் ஆனது. தமிழில் கமல் நடிப்பில் 'பாபநாசம்' என்ற பெயரில் உருவாகி உள்ளது. படம் விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், 'த்ரிஷ்யம்' தற்போது இந்தியிலும் ரீமேக் ஆகிறது. இதில் நாயகனாக அஜய் தேவ்கன் நடிக்க இருக்கிறார். இப்படத்தை நிஷிகாந்த் காமத் இயக்க உள்ளார்.
நிஷிகாந்த் காமத் மராத்தி மற்றும் இந்திப் படங்களை இயக்கியவர். கௌதம் மேனனின் 'காக்க காக்க' படத்தை இந்தியில் 'ஃபோர்ஸ்' என்ற பெயரில் ரீமேக் செய்திருக்கிறார்.
தற்போது 'ராக்கி ஹேண்ட்ஸம்' என்ற படத்தை இயக்கி முடித்துவிட்டார். ஜான் ஆபிரஹாம், ஸ்ருதி ஹாசன் நடித்த இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.
இந்த தருணத்தில், நிஷிகாந்த் காமத் 'த்ரிஷ்யம்' படத்தை இந்தியில் ரீமேக் செய்ய ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். இப்படம் செப்டம்பரில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.