சின்னத்திரை நடிகை நிஷாவுடன் நடிகர் கணேஷ் வெங்கட்ராமன் நிச்சயதார்த்தம்

சின்னத்திரை நடிகை நிஷாவுடன் நடிகர் கணேஷ் வெங்கட்ராமன் நிச்சயதார்த்தம்
Updated on
1 min read

நடிகர் கணேஷ் வெங்கட்ராமனுக்கும், சின்னத்திரை நடிகை நிஷாவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

தமிழ்த் திரையுலகில் 2008-ம் ஆண்டு வெளியான 'அபியும் நானும்' படத்தின் மூலம் அறிமுகமானவர் கணேஷ் வெங்கட்ராமன். அதனைத் தொடர்ந்து 'உன்னைப்போல் ஒருவன்', 'பனித்துளி', 'தீயா வேலை செய்யணும் குமாரு', 'இவன் வேற மாதிரி' உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். படங்கள் மட்டுமல்லாது பல்வேறு விளம்பரப் படங்களிலும் நடித்திருக்கிறார்.

சின்னத்திரையில் நாடகங்கள், நடன நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றில் பிரபலமான நிஷா கிருஷ்ணனை நீண்ட நாட்களாக கணேஷ் வெங்கட்ராமன் காதலித்து வந்திருக்கிறார். தற்போது இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்து, திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்று இருக்கிறது.

இந்த ஆண்டு இறுதியில் இருவரும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு இருப்பதாக கணேஷ் வெங்கட்ராமன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in