எக்ஸ்.டி சினிமாவில் ‘கோச்சடையான் டிரெயிலர்

எக்ஸ்.டி சினிமாவில் ‘கோச்சடையான் டிரெயிலர்
Updated on
1 min read

ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவர உள்ள ‘கோச்சடையான்’ திரைப்படத்தின் டிரெயிலர் எக்ஸ் டி சினிமாவில் திரையிடப்படுகிறது.

ரஜினிகாந்த் நடிக்கும் ‘கோச்சடையான்’ படம் மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தில் தயாராகி உள்ளது. இப்படத்தின் டிரெயிலரை அசையும்ம் இருக்கைகள் கொண்ட அமைப்பில், நிஜ சினிமாவில் பங் கேற்கும் அனுபத்தை ஏற்படுத்தும் வகையில் எக்ஸ்.டியில் வெளி யிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஐ ப்ளே திரை யரங்க நிர்வாக இயக்குநர் ரவிஷங்கர் கூறியதாவது :-

எக்ஸ் டி சினிமாவில், திரைப் படங்களை பார்க்கும்போது திரை யில் பார்க்கும் காட்சிகளுக்கு ஏற்ப இருக்கைகள் அசையும். இதனால் நாமும் சினிமாவில் ஓர் அங்கமாகி அமர்ந்திருப்பதைப்போலவே உணர்வோம்.

சினிமாவில் குதிரை ஒன்று ஓடுவதாக காட்டப்பட்டால், பார்வை யாளர்களின் இறுக்கை குதிரை ஓடுவதைப்போல முன்னும், பின்னும் ஆடும். மின்னல் வெட்டி னால், அரங்கினுள்ளே மின்னல் வெட்டும். சாரல் அடிக்கும் காட்சி யில், திரையரங்கத்திற்குள் ஜில் லென்று சாரல் அடிக்கும் உணர்வை பார்வையாளர்களும் உணரலாம்.

5 நிமிடம் முதல் 10 நிமிடம் வரைக்குமான பிரத்யேக அனி மேஷன் திரைப்படங்கள் திரை யிடும் இந்த திரையரங்கில் ‘கோச்சடையான்’ திரைப்படத்தின் டிரெயிலர் திரையிடப்படுகிறது. சென்னை, கோயம்புத்தூரில் உள்ள ஐ பிளே, எக்ஸ் டி சினிமா அரங்குகளில் இந்த முறையில் திரையிட்டு வருகிறோம்’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in