

வடிவேலுவைத் தொடர்ந்து நாயகனாக ஆகியிருக்கும் நடிகர் சந்தானமும் தற்போது ட்விட்டர் தளத்தில் இணைந்திருக்கிறார்.
நகைச்சுவை நடிகர்கள் தொடர்ந்து ட்விட்டர் தளத்தில் இணைந்து வருவது வாடிக்கையாகி வருகிறது. விவேக், வடிவேலு ஆகியோரைத் தொடர்ந்து தற்போது நடிகர் சந்தானமும் ட்விட்டர் தளத்தில் இணைந்திருக்கிறார்.
'தெனாலிராமன்' படத்தினை விளம்பரப்படுத்தும் வகையில், ட்விட்டர் தளத்தில் இணைந்தார் வடிவேலு. தற்போது சந்தானம் நாயகனாக நடிக்கும் 'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்' படமும் விரைவில் வெளிவர இருக்கிறது.
இன்று ட்விட்டர் தளத்தில் அதிகாரப்பூர்வமாக தன்னை இணைத்திருக்கிறார் சந்தானம். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், " @iamsanthanam என்ற முகவரியில், ட்விட்டர் தளத்தில் இணைந்திருக்கிறேன். என்னைப் பற்றிய செய்திகள் மற்றும் என்னை இந்த முகவரியின் மூலம் தொடர்பு கொள்ளலாம்" என்று தெரிவித்திருக்கிறார்.
நகைச்சுவை நடிகர்கள் கவுண்டமணி, சூரி உள்ளிட்ட சிலர் மட்டும் தான் இன்னும் இணையாமல் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சந்தானத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் தளம் : https://twitter.com/iamsanthanam