

மறைந்த இசைக் கலைஞர் மாண்டலின் ஸ்ரீனிவாஸ் பிறந்த நாளான பிப்ரவரி 28-ம் தேதி இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்த திட்டமிட்டு இருக்கிறார்கள். இந்நிகழ்ச்சியில் கமல்ஹாசன், இளையராஜா ஆகியோர் பங்கேற்க இருக்கிறார்கள்.
மாண்டலின் ஸ்ரீனிவாஸின் 45-ஆவது பிறந்த நாளான்று ஒரு பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டு இருக்கிறார்கள். இந்நிகழ்ச்சியில், இந்தியாவின் தலை சிறந்த இசைக் கலைஞர்கள் பலரும் பங்கேற்று சிறப்பிக்க இருக்கிறார்கள்.
ஜாகீர் உசேன், விக்கு விநாயகராம், அருணா சாய்ராம், ஹரிஹரன், சங்கர் மகாதேவன், டிரம்ஸ் சிவமணி, மாண்டலின் ராஜேஷ், செல்வகணேஷ், ரஞ்சித் பரோட், தேவிஸ்ரீ பிரசாத் உள்ளிட்ட ஏராளமான இசைக் கலைஞர்கள் இதில் பங்கேற்கிறார்கள்.
சென்னை மியூசிக் அகாடமியில் பிப்ரவரி 28-ஆம் தேதி மாலை நடைபெறும் இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் கமல்ஹாசன், இசையமைப்பாளர் இளையராஜா ஆகியோர் கலந்து கொண்டு மாண்டலின் ஸ்ரீனிவாஸூக்கு புகழாரம் சூட்டவுள்ளனர்.
மாண்டலின் ஸ்ரீனிவாஸின் இசை அனைவருக்கும் போய் சேர வேண்டும் என்ற முனைப்பில் இந்நிகழ்ச்சிக்கு எந்தொரு கட்டணமும் இன்றி அனைவரும் கண்டு ரசிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி இதில் பங்கேற்க இருக்கும் கலைஞர்கள் யாருமே, இந்நிகழ்ச்சிகாக பணம் ஏதுமின்றி கலந்து கொள்ள இருப்பது குறிப்பிடத்தக்கது.