

அஜித் நடித்து வெளியான 'என்னை அறிந்தால்' திரைப்படம் முதல் இரண்டு நாட்களில் ரூ.20.83 கோடியை தமிழகத்தில் மட்டும் வசூலித்துள்ளது.
விடுமுறை நாளில் வெளியாகாவிட்டாலும் 'என்னை அறிந்தால்' வசூலை அள்ளியிருப்பது கவனிக்கத்தக்கது.
இது குறித்து பேசிய வர்த்தக நிபுணர் த்ரிநாத், "நட்சத்திரம் ஒருவரது திரைப்படம் வார நாளில் வெளியாகி, வசூலையும் குவிக்கும் என்பது அரிதே. ஆனால் அதை 'என்னை அறிந்தால்' சாதித்துள்ளது. வெளியான நாள் அன்று ரூ.11.5 கோடியையும் சேர்த்து இரண்டு நாட்களில் மொத்தம் ரூ.20.83 கோடியையும் இப்படம் வசூலித்துள்ளது.
படத்தின் நீளம் குறித்தும், கெளதம் மேனனின் முந்தைய படங்களின் சாயல் குறித்தும் விமர்சனங்கள் இருந்தாலும், படம் பாக்ஸ் ஆஃபிஸில் சோடை போகவில்லை" என்றார் அவர்.
கெளதம் மேனன் இயக்கி, ஏ.எம் ரத்னம் தயாரித்து, அஜித், அருண் விஜய், த்ரிஷா, அனுஷ்கா உள்ளிடோர் நடிப்பில், 'என்னை அறிந்தால்' பிப்ரவரி 5-ஆம் தேதி வியாழக்கிழமை வெளியானது.