

அஜித் பிறந்த நாளான மே 1ம் தேதி வெங்கட்பிரபு இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் 'மாஸ்' திரைப்படம் வெளியாக இருக்கிறது.
'அஞ்சான்' படத்தைத் தொடர்ந்து வெங்கட்பிரபு இயக்கத்தில் சூர்யா நடிக்கும் 'மாஸ்' படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. நயன்தாரா, சமுத்திரக்கனி, பார்த்திபன், பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.
ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தை ஈராஸ் நிறுவனம் வெளியிட இருக்கிறது. மே 1ம் தேதி வெளியாகும் என்று அறிவித்திருக்கிறார்கள்.
இசை வெளியீடு, படம் வெளியீடு எப்போது என்று எந்தவொரு தகவலும் தெரியாமல் இருந்த நிலையில், மே 1ம் தேதி படம் வெளியாகும் என்று அறிவித்திருப்பது சூர்யா ரசிகர்களை மகிழ்வித்திருக்கிறது.