அதிகாரபூர்வம் ஆன போலி ஃபேஸ்புக் பக்கம்: சூர்யா தரப்பு நடவடிக்கையால் நீக்கம்

அதிகாரபூர்வம் ஆன போலி ஃபேஸ்புக் பக்கம்: சூர்யா தரப்பு நடவடிக்கையால் நீக்கம்
Updated on
1 min read

ஃபேஸ்புக் வலைதளத்தால் அதிகாரபூர்வமானது (வெரிஃபைடு) என்று குறிப்பிடப்பட்ட நடிகர் சூர்யா பெயரில் உருவாக்கப்பட்ட போலிப் பக்கம் நீக்கப்பட்டது.

நடிகர் சூர்யா தரப்பின் துரித நடவடிக்கையால், போலி ஃபேஸ்புக் பக்கம் அகற்றப்பட்டது.

ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் சூர்யா இணையாமல் இருந்தார். ஃபேஸ்புக் வலைதளத்தில் விரைவில் சூர்யா இணையவிருப்பதாக செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில், இன்று காலை முதல் ஃபேஸ்புக்கில் சூர்யாவின் அதிகாரபூர்வ ஃபேஸ்புக் பக்கம் செயல்படுகிறது என்று கூறி, ஒரு போலிப் பக்கம் அவரது ரசிகர்களால் பகிரப்பட்டது. அது நம்பத்தகுந்த வகையில் இருந்தது.

குறிப்பாக, அதிகாரபூர்வ பக்கங்களை அங்கீகரிக்கும் வகையிலான ஃபேஸ்புக்கின் வெரிஃபைடு குறியீடும் அதில் இடம்பெற்றிருந்ததால், அதில் லைக்குகளின் எண்ணிக்கை பெருகத் தொடங்கின.

இந்தத் தகவல் அறிந்த நடிகர் சூர்யா தரப்பினர் இந்தப் பக்கம், வேறு எவராலோ தொடங்கப்பட்ட போலியான கணக்கு என்று அறிவித்தார்கள்.

மேலும், சைபர் பிரிவு போலீஸில் புகார் அளித்தார்கள். மெயில், ரிப்போர்ட் வசதிகள் மூலம் ஃபேஸ்புக் நிர்வாக கவனத்துக்கும் இந்த விஷயம் கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து, அந்தப் பக்கம் உடனடியாக ஃபேஸ்புக் நிர்வாகத்தால் நீக்கப்பட்டது

இந்த நிலையில், ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் என எந்தொரு சமூக வலைதளத்திலும் சூர்யா இணையவில்லை என்றும், வரும் காலத்தில் இணையும் பட்சத்தில் அதிகாரபூர்வமாக அறிவிப்போம் என்றும் சூர்யா தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in