

முன்னணி நடிகையான த்ரிஷாவுக்கும், தொழிலதிபர் வருண் மணியனுக்கும் இன்று திருமண நிச்சயதார்த்தம் நடக்கிறது.
இந்த நிச்சயதார்த்த விழாவுக்கு த்ரிஷா மற்றும் வருண் மணியனின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நிச்சயதார்த்தத்தின்போது த்ரிஷாவுக்கு உலகப் புகழ் பெற்ற ஹாரி வின்ஸ்டன் வைர மோதிரத்தை வருண் மணியன் அணிவிக்கவுள்ளார்.
நிகழ்ச்சியின்போது த்ரிஷா அணியவுள்ள புடவையை புகழ்பெற்ற ஆடை வடி வமைப்பாளர்களான நீடா மற்றும் நிஷ்கா லுல்லா ஆகியோர் வடிவமைத்திருக் கிறார்கள். திருமண நிச்சயதார்த்தத்தை தொடர்ந்து த்ரிஷா மற்றும் வருண் மணியனின் நெருங்கிய நண்பர்களுக்கான விருந்து நிகழ்ச்சி நாளை நடக்கிறது.
நிச்சயதார்த்தம் குறித்து தனது ட்விட்டர் தளத்தில் குறிப்பிட்டுள்ள வருண் மணியன், “த்ரிஷாவுக்கான நிச்சயதார்த்த பரிசாக, ஆயிரக்கணக்கான விலங்குகளுக்கு இந்த வாரத்தில் உணவு வழங்கப்படும். மேலும் வீடற்ற மிருகங்கள் சிலவற்றின் இருப்பிடம், மருத்துவ செலவுகளையும் நாங்கள் ஒரு வருடத்துக்கு ஏற்றுக்கொள்ள இருக்கிறோம். ரோல்ஸ் ராய்ஸ் காரை விட இதையே த்ரிஷா சிறந்த பரிசாக விரும்புவார் என்பது கண்டிப்பாக எனக்குத் தெரியும்” என்று குறிப்பிட்டுள்ளார்.