

மகிழ் திருமேனி மீண்டும் ஆர்யாவை வைத்து அடுத்த படம் இயக்குகிறார். இப்படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை.
'முன் தினம் பார்த்தேனே ', 'தடையறத் தாக்க', 'மீகாமன்' ஆகிய படங்களை இயக்கியவர் மகிழ் திருமேனி.
ஆர்யா, ஹன்சிகா நடிப்பில் உருவான 'மீகாமன்' சமீபத்தில் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பைப் பெற்றது. வழக்கமான கேங்ஸ்டர் கதைக்குள் போதைப்பொருள் கடத்தல், போலீஸ் ஹீரோ, டானை திணறடிப்பது என படத்தில் கொடுத்திருக்கும் டீடெய்லிங் குறித்து மகிழ் திருமேனிக்குப் பாராட்டுகள் குவிந்தன.
இந்நிலையில், அடுத்த படம் குறித்து மகிழ் திருமேனியிடம் பேசினோம். ''ஆர்யாவை இயக்க இருப்பது உண்மைதான். மீண்டும் ஆர்யாவுடன் இணைவதில் மகிழ்ச்சி.
வித்தியாசமான கதைக்களத்தைப் படமாக்க உள்ளேன். விரைவில் படம் குறித்த விரிவான தகவல்களை அதிகாரபூர்வமாக அறிவிக்க உள்ளேன்'' என்று மகிழ் திருமேனி தெரிவித்தார்.