விக்ரமுடன் இணையும் சம்பூர்னேஷ்: இது 10 எண்றதுக்குள்ள ஸ்பெஷல்

விக்ரமுடன் இணையும் சம்பூர்னேஷ்: இது 10 எண்றதுக்குள்ள ஸ்பெஷல்

Published on

விஜய் மில்டன் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் '10 எண்றதுகுள்ள' படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கவிருக்கிறார் தெலுங்கு நடிகர் சம்பூர்னேஷ்

விக்ரம், சமந்தா உள்ளிட்ட பலர் நடித்து வரும் '10 எண்றதுக்குள்ள' படத்தை இயக்கி வருகிறார் விஜய் மில்டன். ஏ.ஆர்.முருகதாஸ் தயாரித்து வரும் இப்படத்திற்கு இமான் இசையமைத்து வருகிறார்.

'முண்டாசுப்பட்டி' படத்தில் காமெடி வேடத்தில் நடித்த ராமதாஸ், '10 எண்றதுக்குள்ள' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். அவரைத் தொடர்ந்து தற்போது தெலுங்கு நடிகர் சம்பூர்னேஷ் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

"நான் வந்த வாய்ப்பை ஏற்றுக் கொண்டுள்ளேன் ஆனால் என் பாத்திரத்தைப் பற்றி எதுவும் எனக்குத் இதுவரை தெரியாது. கூடிய சீக்கிரம் படக்குழுவை சந்திக்கவுள்ளேன். விக்ரமோடு நடிப்பதால் அது எவ்வளவு சிறிய கதாபாத்திரமாக இருந்தாலும் பரவாயில்லை ஏனென்றால் அவரிடம் கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது." என்று சம்பூர்னேஷ் தெரிவித்தார்.

'தமிழ் படம்' போல, தெலுங்குப் படங்களை நக்கலடித்து வெளியான 'ஹ்ருதய கலேயம்' என்ற தெலுங்கு படத்தின் மூலம் சம்பூர்னேஷ் புகழடைந்தார். இப்படம் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது.

சம்பூ என ரசிகர்களால் அழைக்கப்படும் இவர் தற்போது 'கொப்பரி மாட்டா' மற்றும் 'ஏஸ் சிங்கம் 123' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in