

மார்ச் மாதம் திருமணம் என்பதால், நடிகை த்ரிஷாவின் தமிழ்த் திரையுலக வாழ்க்கையில் 'என்னை அறிந்தால்' கடைசி படமாக அமையும் வாய்ப்பு நிலவுகிறது.
கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் அஜித்துடன் இணைந்து த்ரிஷா நடித்திருக்கும் 'என்னை அறிந்தால்'. ஜனவரி 29-ஆம் தேதி இப்படம் திரைக்கு வரவிருக்கிறது.
த்ரிஷா நடிப்பில் வெளிவரும் கடைசி படமாக 'என்னை அறிந்தால்' இருக்கும் என்கிறது, அவரது நெருங்கிய திரையுலக வட்டாரம்.
இது குறித்து த்ரிஷாவிற்கு நெருக்கமானவர்களிடம் பேசியபோது, "ஆமாம். த்ரிஷாவுக்கு மார்ச்சில் திருமணம் நடைபெற இருக்கிறது. அதனைத் தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தாமல், வருண் மணியனின் தயாரிப்பு நிறுவனத்தில் கவனம் செலுத்துவார்" என்றார்கள்.
த்ரிஷா, வருண் மணியன் மற்றும் இருவரின் நண்பர்கள் ஆகியோருடன் இணைந்து தாஹ்மஹால் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை கண்டு களித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, நவம்பர் 16-ஆம் தேதி மாலை த்ரிஷாவின் செனடாப் சாலையில் உள்ள வீட்டில் வைத்து திருமணப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. த்ரிஷா மற்றும் வருண் மணியன் ஆகிய இரு குடும்பத்தினர் மட்டுமே கலந்துகொண்டார்கள்.
இரு குடும்பங்கள் பேசி முடித்துவிட்டதால், திருமண நிச்சயதார்த்தம் என்பது இம்மாதம் திரையுலக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற இருக்கிறது. இந்த மாதத்துக்குள் மற்ற மொழியில் நடித்து வரும் படங்கள் அனைத்தையும் முடித்துக் கொடுத்துவிட்டு, த்ரிஷா நிச்சயதார்த்தம் செய்துகொள்ள இருக்கிறார்.
திருமணப் பேச்சுவார்த்தையின்போது இருவருமே மோதிரம் மாற்றிக்கொண்டார்கள். 2015 மார்ச்சில் இருவரும் திருமணம் செய்துகொள்ளத் திட்டமிட்டு இருக்கிறார்கள்.