அஜித் படம் வெளியாகும் 8 தியேட்டர்களில் குண்டு வெடிக்கும்: தொடரும் மிரட்டல்கள்

அஜித் படம் வெளியாகும் 8 தியேட்டர்களில் குண்டு வெடிக்கும்: தொடரும் மிரட்டல்கள்
Updated on
1 min read

நடிகர் அஜித் படத்தை வெளியிடும் தியேட்டர்களில் வெடிகுண்டு வெடிக்கும் என்று மிரட்டல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

நடிகர் அஜித் நடித்துள்ள ‘என்னை அறிந்தால்' திரைப்படம் பொங்கலுக்கு வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், சில காரணங்களால் தள்ளி வைக்கப்பட்ட அந்தப் படம், வருகிற 5-ம் தேதி வெளியாக வுள்ளது. சென்னையில் மட்டும் 15 தியேட்டர்களில் படம் வெளி யிடப்படுகிறது.

அந்தப் படம் வெளியாகவுள்ள தியேட்டர்களில் ஒன்றான சென்னை அசோக் பில்லர் அருகே யுள்ள உதயம் தியேட்டருக்கு, நேற்று முன்தினம் கடிதம் வந்தது. தியேட்டர் மேலாளர் ஹரி ஹரன் கடிதத்தைப் பிரித்துப் படித்த போது அதில், ‘என்னை அறிந்தால் திரைப்படம் வெளியாகும் பிப். 5-ம் தேதி, உதயம் உட்பட 8 தியேட்டர்களில் குண்டு வெடிக்கும். இதை யாராலும் தடுக்க முடியாது' என்று குறிப்பிடப் பட்டிருந்தது. மேலும், அஜித்தின் உயிருக்கு ஆபத்து என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. முடிவில், கடிதத்தை எழுதிய தாக ‘இப்படிக்கு, அஜித்- திரு வான்மியூர்’ என்று குறிப்பிடப்பட்டி ருந்தது. நடிகர் அஜித்தின் வீடு திருவான்மியூரில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

மிரட்டல் கடிதம் குறித்து குமரன் நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன், அஜித் நடித்த வீரம் படம் வெளியானபோதும் வெடிகுண்டு மிரட்டல்கள் வந்தன. 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு போன் செய்த மர்ம நபர், அஜித் வீட்டில் வெடிகுண்டு வைத்தி ருப்பதாக மிரட்டல் விடுத்தது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in