ஒண்ணுமே புரியல: ஹாலிவுட் வாய்ப்பை ஏற்பாரா விஜய்?

ஒண்ணுமே புரியல: ஹாலிவுட் வாய்ப்பை ஏற்பாரா விஜய்?
Updated on
1 min read

'ஒண்ணுமே புரியல' படத்தின் ஹாலிவுட் ரீமேக்கில் நாயகனாக நடிக்க விஜய்யை அணுகி இருக்கிறார்கள். இதற்கு இன்னும் சம்மதம் தெரிவிக்கவில்லை.

ஜாக் மைக்கேல், ஹரிணி உள்ளிட்ட புதுமுகங்கள் நடித்திருக்கும் படம் 'ஒண்ணுமே புரியல'. ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரி ரெஹனா இப்படத்திற்கு இசையமைத்து இருக்கிறார். இப்படம் இன்னும் வெளியாகவில்லை.

'ஒண்ணுமே புரியல' இன்னும் வெளியாகவில்லை என்றாலும், இப்படத்தின் ஆங்கிலம் மற்றும் ஜெர்மன் ரீமேக் உரிமையை ஐரோப்பிய நிறுவனம் ஒன்று கைப்பற்றி இருக்கிறது. முதலில் ஆங்கிலத்தில் தயாரித்து பிறகு ஜெர்மனில் டப்பிங் செய்து வெளியிட தீர்மானித்து இருக்கிறது.

இப்படத்தின் கதையின்படி ஒரு ஹாலிவுட் நடிகர் நடித்தால் சரியாக இருக்காது. இந்திய நடிகர் யாராவது நடித்தால் மட்டுமே சரியாக அமையும் என்று கருதி இருக்கிறார்கள். இதனால், இந்தியில் உள்ள முன்னணி நடிகர்களை அணுகலாம் என்று ஆலோசித்து இருக்கிறார்கள்.

இது குறித்து 'ஒண்ணுமே புரியல' படத்தின் தயாரிப்பாளரான பால ராம்குமாரை அணுகி இருக்கிறார்கள். அவரோ விஜய்க்கு அதிகமான மார்க்கெட் இருக்கிறது. அவர் நடித்தால் நன்றாக இருக்கும் என்பதற்கு ஐரோப்பிய நிறுவனமும் சம்மதம் தெரிவித்திருக்கிறது.

விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரிடம் ஹாலிவுட் படம் குறித்து பேசி இருக்கிறார்கள். அவரோ விஜய்யிடம் பேசிவிட்டு சொல்கிறேன் என்று தெரிவித்திருக்கிறார். இதற்கு விஜய் என்ன சொல்ல இருக்கிறார் என்பதை பலரும் ஆவலோடு எதிர்நோக்கி இருக்கிறார்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in