

லிங்கா திரைப்படம் வாயிலாக ஏற்பட்டுள்ள இழப்பை ஈடு செய்ய வேண்டி விநியோகஸ்தர்கள் வரும் ஜனவரி 10-ஆம் தேதி சென்னையில் ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் மேற்கொள்கின்றனர்.
இது குறித்து, தமிழகமெங்கும் லிங்கா திரைப்படத்தை திரையிட்ட விநியோகஸ்தர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“லிங்கா திரைப்படத்தின் வாயிலாக ஏற்பட்டுள்ள இழப்பை ஈடு செய்ய வேண்டி விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் கலந்து கொள்ளும் ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் ஜனவரி 10-ஆம் தேதி காலை 10 மணிக்கு சென்னை வள்ளுவர்கோட்டம் அருகில் நடைபெற உள்ளது.
இதில் லிங்கா திரைப்படத்தை திரையிட்ட அனைத்து திரையரங்கு உரிமையாளர்களும், தவறாது கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம்.”
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.