

'ஐ', 'ஆம்பள' ஆகிய படங்களோடு 'டார்லிங்' படமும் பொங்கலுக்கு வெளியாகும் என்று ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் அறிவித்திருக்கிறது.
'ஐ', 'என்னை அறிந்தால்', 'ஆம்பள', 'காக்கி சட்டை' மற்றும் 'கொம்பன்' ஆகிய படங்கள் பொங்கலுக்கு வெளியீடு என்று விளம்பரப்படுத்தினார்கள். இப்படங்களில் 'என்னை அறிந்தால்', 'காக்கி சட்டை', 'கொம்பன்' ஆகிய படங்கள் பொங்கல் வெளியீட்டில் இருந்து பின்வாங்கியது.
பொங்கல் வெளியீட்டில் இருந்து பின்வாங்கிய 'காக்கி சட்டை' சென்சாருக்கு அனுப்பி இருக்கிறார்கள். சென்சார் பணிகள் முடிவடைந்து பொங்கலுக்கு வெளியிடலாம் என்று தீர்மானித்து பணிகளை முடுக்கி விட்டிருக்கிறார்கள்.
இந்நிலையில் பொங்கல் வெளியீட்டில் இணையக்கூடும் என்று 'டார்லிங்' திரைப்படம் எதிர்பார்க்கப்பட்டது. விரைவில் வெளியீடு என்று விளம்பரப்படுத்தி வந்தார்கள். தற்போது ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடித்திருக்கும் 'டார்லிங்' பொங்கல் வெளியீடு என்று அப்படத்தின் தயாரிப்பின் நிறுவனமான ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் அறிவித்திருக்கிறது.
தற்போது உள்ள சூழ்நிலையில் 'ஐ', 'ஆம்பள', 'டார்லிங்' ஆகிய படங்கள் பொங்கல் வெளியீடு என்று விளம்பரப்படுத்தி இருக்கிறார்கள். எந்த தேதியில் வெளியீடு என்று எந்தொரு படமும் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.