

புதுமுகங்கள் நடிப்பில் விமர்சகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற 'ர', விரைவில் இந்தியில் ரீமேக் ஆக இருக்கிறது.
ஆஷ்ரப், அதிதி செங்கப்பா நடிப்பில் பிரபு யுவராஜ் இயக்கத்தில் டிசம்பர் 5-ம் தேதி வெளியான படம் 'ர'. ராஜ் ஆர்யன் இசையமைத்த இப்படத்தினை ப்ளான் ஏ ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. பிரபு யுவராஜ் இயக்கிய இப்படத்தின் கதையை பிரபு யுவராஜ் மற்றும் நாயகன் ஆஷ்ரப் இணைந்து எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இப்படத்திற்கு விமர்சகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது. வெளியான சில நாட்களில் திரையரங்குகள் அதிகரிக்கப்பட்டன.
இந்நிலையில், இப்படத்தின் இந்தி உரிமையை தற்போது ஒயில் எலிபென்ட் (Wild elephants) என்ற நிறுவனம் வாங்கியிருக்கிறது. இந்திக்கு ஏற்றவாறு சில மாற்றங்கள் செய்து இயக்க திட்டமிட்டு இருக்கிறார்கள். பிரபு யுவராஜ் மற்றும் அஷ்ரப் இணைந்து இப்படத்தினை இயக்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.
தமிழில் இப்படத்தினை தயாரித்த ப்ளான் ஏ ஸ்டூடியோஸ், இந்தியில் இணைத் தயாரிப்பாளராக பணியாற்ற இருக்கிறது. இந்தியில் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. இம்மாத இறுதிக்குள் முடிவு செய்யப்பட்டு, விரைவில் படப்பிடிப்பு தொடங்கப்பட்டும் என்று அறிவித்திருக்கிறார்கள்.