

நடிகை விந்தியா உடல்நலக் குறைவு காரணமாக சென்னை கே.கே.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
‘சங்கமம்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறி முகமானவர் நடிகை விந்தியா. அதைத் தொடர்ந்து ‘சார்லி சாப்ளின்’, ‘விஸ்வநாதன் ராம மூர்த்தி’ உள்ளிட்ட பல படங்களில் அவர் நடித்துள்ளார்.
அதிமுகவில் உறுப்பினராகச் சேர்ந்த அவர் அக்கட்சியின் பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்டு பேசி வருகிறார்.
வாரணாசி சென்று வந்த அவர், கடந்த சில நாட்களாக உடல் நலமில்லாமல் இருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை வீட்டில் திடீரென மயங்கி விழுந்தார்.
இதையடுத்து சென்னை கே.கே.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். மருத்துவர்கள் பரிசோதனை செய்து பார்த்ததில், அவருடைய கணையம் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.