

'ரோமியோ ஜுலியட்' தலைப்பை எப்படி விட்டு வைத்தார்கள் என்று தெரியவில்லை என்று இயக்குநர் லஷ்மண் கூறினார்.
ஜெயம் ரவி, ஹன்சிகா நடிப்பில் உருவாகும் 'ரோமியோ ஜுலியட்' படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியது. இப்படத்தினை லஷ்மன் இயக்குகிறார். இமான் இசையமைக்க, எஸ்.நந்தகோபால் தயாரிக்கிறார்.
ஜெயம் ரவி, ஹன்சிகா உடன் பல்வேறு முன்னணி நடிகர், நடிகைகள் நடிக்கிறார்கள். இப்படம் குறித்து இயக்குநர் லஷ்மன் கூறியது, "பேண்டஸியான காதல் கதை இது. ஜாலியான காதலை எப்படி ஜாலியாக சொல்கிறோம் என்பதுதான் திரைக்கதை.
இந்த 2014 – ல் 1947களில் இருந்த ஒரு கவித்துவமான காதலை எதிர்பார்க்கும் ஹீரோ, இதே 2014 – ல் 2025 – ல் தன் வாழ்கையை எப்படிப் பாதுகாப்பாக அமைத்துக்கொள்ள வேண்டும் என்று கால்குலேட்டிவாக யோசிக்கும் ஹீரோயின், இவர்களுக்கிடையே ஏற்பட்ட சுவாரசியமான காதலை ஜாலியாக சொல்வதே இந்தப்படம்.”
ஒரு வருடத்திற்கு 200 ல் இருந்து 300 படங்களாவது காதலை மையப்படுத்தியதாக இருக்கிறது. இந்த ‘ரோமியோ ஜூலியட்’ என்ற தலைப்பை எப்படி விட்டு வைத்தார்கள் என்பது ஆச்சர்யமான விஷயம். ஒருவேளை இந்த தலைப்பு இந்த படத்திற்காகவே காத்திருந்ததோ, என்னவோ!" என்றார்.