பரட்டையை நினைவூட்டிய சேது- கார்த்திக் சுப்புராஜிடம் ரஜினி நெகிழ்ச்சி

பரட்டையை நினைவூட்டிய சேது- கார்த்திக் சுப்புராஜிடம் ரஜினி நெகிழ்ச்சி
Updated on
1 min read

சிமோகாவில் நடைபெற்ற 'லிங்கா' படப்பிடிப்பின் போது நடிகர் கருணாகரன் உதவியோடு நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து பேசியிருக்கிறார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்.

தற்போது 'லிங்கா' திரைப்படம் டிசம்பர் 12-ஆம் தேதி வெளியாக இருப்பதால், ரஜினியோடு உரையாடியதை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.

"'லிங்கா' படம் வெளியாக இருப்பதால், எனது வாழ்க்கையின் அற்புதமான தருணத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். சிமோகாவில் நடைபெற்ற 'லிங்கா' படப்பிடிப்பின் போது தலைவரை சந்தித்து பேசினேன்.

'ஜிகர்தண்டா' படத்தை வெகுவாக பாராட்டினார். ஓட்டுமொத்த படக்குழுவினரின் உழைப்பை பாராட்டினார். எனது வாழ்க்கையில் எனக்கு கிடைத்த மகத்தான பாராட்டு, "நான் சேது பாத்திரத்தை செய்ய விரும்பினேன்" என்று தெரிவித்தார். அதுமட்டுமன்றி சிம்ஹாவின் நடிப்பைப் பார்த்தபோது தனக்கு 'பரட்டை' கதாபாத்திரம் ஞாபகம் வந்ததாக தெரிவித்தார் ரஜினிகாந்த்.

'முள்ளும் மலரும்', 'பாட்ஷா' உள்ளிட்ட பல்வேறு படங்களில் தனது ஏற்பட்ட அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். நன்றி தலைவா! இது போதும். இச்சந்திப்பிற்கு உதவிய கருணாகரன் மற்றும் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எனது வாழ்க்கையில் மறக்க முடியாத 2 மணி நேரமாக அமைந்தது" என்று கார்த்திக் சுப்புராம் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in