ரஜினி பிறந்தநாள் என்ன தேசிய விடுமுறையா?- வெகுண்டெழுந்த லிங்கா விநியோகஸ்தர்

ரஜினி பிறந்தநாள் என்ன தேசிய விடுமுறையா?- வெகுண்டெழுந்த லிங்கா விநியோகஸ்தர்
Updated on
1 min read

ரஜினி பிறந்தநாளில்தான் படத்தை திரையிட வேண்டுமென பரீட்சை நேரத்தில் 'லிங்கா' படத்தை வெளியிட்டு தங்களை நஷ்டமடையவைத்துவிட்டதாக விநியோகஸ்தர் ஒருவர் சரமாரி புகார் கூறியுள்ளார்.

ரஜினிகாந்த் நடிப்பில், கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் அண்மையில் வெளியான லிங்கா திரைப்படத்தால் கடும் நஷ்டமடைந்துவிட்டதாக தமிழகம் முழுவதும் பல்வேறு ஊர்களில் உள்ள சினிமா விநியோகஸ்தர்கள் வருத்ததில் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இக்குற்றச்சாட்டின் உச்சபட்சமாக திருச்சி, தஞ்சாவூர் மாவட்டங்களில் லிங்கா திரைப்பட விநியோக உரிமையை பெற்ற ஒருவர் வெகுண்டெழுந்த காட்சி யூ டியூபில் வெளியாகியுள்ளது.

நஷ்டமடைந்த அந்த விநியோகிஸ்தர், "லிங்கா திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர், நடிகர் ரஜினிகாந்த் அனைவரும் இப்படம் மிகவும் பிரம்மாண்டமானது. படையப்பா திரைப்படம்போல் பிரம்மாண்ட வெற்றி பெறும் என்றெல்லாம் பேசினார்கள்.

பின்னர், கதை திருடப்பட்டது அப்படி..இப்படின்னு இவர்களாகவே தூண்டிவிட்டு வழக்கு பதிவு செய்யவைத்து எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தினர். இதையெல்லாம் நிஜம் என நம்பி என்னைப்போன்றோர் பட விநியோக உரிமைய வாங்கினோம். ஆனால், இன்று ரூ.8 கோடி நஷ்டப்பட்டிருக்கிறேன்.

பட ரிலீஸ் பண்ண தேதியே மிகவும் தவறானது. ரஜினிகாந்த படத்தை அவரது பிறந்தநாளில் ரிலீஸ் செய்திருக்கிறார். ரஜினி பிறந்தநாள் என்ன தேசிய விடுமுறையா? அரையாண்டுத் தேர்வு காலத்தில் படத்தை ரிலீஸ் செய்தால் தியேட்டருக்கு யார் வருவார்கள்.

இத்தனை வருடம் சினிமாவில் இருக்கும் ரஜினிக்கு இதுகூடவா தெரியாது. இந்தப் படத்தை 200 கோடி ரூபாய் வரை தமிழ், தெலுங்கு, இந்தி என வியாபாரம் செய்திருக்கின்றனர். ஆனால், நாங்களோ திரையரங்கு உரிமையாளர்கள் மீது எங்கள் சுமையை இறக்கி வைத்திருக்கிறோம். ரஜினிகாந்த் தாயுள்ளம் கொண்டு எங்களுக்கு இழப்பீடு தர வேண்டும்" என கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in