மீண்டும் மருதநாயகம் தொடங்குகிறார் கமல்ஹாசன்

மீண்டும் மருதநாயகம் தொடங்குகிறார் கமல்ஹாசன்
Updated on
1 min read

1997ம் ஆண்டு நிதிப் பிரச்சினை காரணமாக கைவிடப்பட்ட 'மருதநாயகம்' படம் மீண்டும் தொடங்கவிருப்பதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

1997-ம் ஆண்டு கமல்ஹாசன் நடித்து, தயாரிக்க இருப்பதாக தொடங்கப்பட்ட படம் 'மருதநாயகம்'. அவரே இயக்குநர் பொறுப்பையும் ஏற்று இருந்தார். இப்படத்தின் தொடக்க விழாவில் இங்கிலாந்து ராணியான இரண்டாம் எலிசபெத் பங்கேற்றார். மிகப் பிரம்மாண்டமான முன்னோட்டக் காட்சிகள், தொடக்கவிழா என அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்திய படம் 'மருதநாயகம்'

நிதி நெருக்கடி காரணமக 'மருதநாயகம்' படம் கைவிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து கமல் அளித்த பல பேட்டிகளில் 'மருதநாயகம்' பற்றிய கேள்விக்கு "அப்படத்தின் பட்ஜெட்டிற்கு எந்த ஒரு தயாரிப்பாளராவது முன்வந்தால் மீண்டும் தொடங்கப்படும்" என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் 'மருதநாயகம்' குறித்த கேள்விக்கு தற்போது பதிலளித்துள்ள கமல்ஹாசன், லண்டனில் உள்ள தனது நண்பர் தொழிலதிபர் ஒருவர் அப்படத்தை தயாரிக்க விரும்புவதாக கூறியிருக்கிறார். ”பட்ஜெட் அதிகமாச்சே என்று கேட்டேன். அது என் கவலை. அத்தனை செலவையும் அந்தப் படம் தாங்கும். நானும் தான்" என்று கூறியிருக்கிறார்.

கமல்ஹாசனின் இந்த பதிலால், 'மருதநாயகம்' எந்த நேரத்திலும் தொடங்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது. ஏற்கனவே கமல்ஹாசன், அப்படத்தின் முதல் 30 நிமிட காட்சிகளை காட்சிப்படுத்திவிட்டார். மீதமுள்ள காட்சிகளைத் தான் காட்சிப்படுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in