போலிகள் தொல்லையால் ட்விட்டர், ஃபேஸ்புக்கில் இணைந்தார் நடிகர் சூரி

போலிகள் தொல்லையால் ட்விட்டர், ஃபேஸ்புக்கில் இணைந்தார் நடிகர் சூரி
Updated on
1 min read

ட்விட்டர், ஃபேஸ்புக்கில் போலி கணக்குகள் பெருகி வருவதால், அதிகாரப்பூர்வமாக சமூக வலைதளங்களில் இணைந்தார் நடிகர் சூரி.

ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் இணையதளங்களில் சூரியின் பெயரில் பல்வேறு போலி கணக்குகள் இயங்கி வருகின்றன. மற்ற நடிகர்களின் படங்களை கிண்டல் செய்வது உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார் நடிகர் சூரி.

இதனைத் தொடர்ந்து போலீஸில் புகாரும் செய்தார். சில நாட்கள் செயல்படாமல் இருந்த அவரது போலி கணக்குகள் மறுபடியும் செயல்பட ஆரம்பித்தன.

இப்பிரச்சினைகளில் இருந்து விடுபடும் வகையில், தன்னை அதிகாரப்பூர்வமாக ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் தளங்களில் இணைத்துக் கொண்டார் நடிகர் சூரி.

ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் இரண்டிலுமே ACTORSOORI என்ற பெயரில் இணைந்திருக்கிறார்.

தனது படப்பிடிப்பு தளங்களில் நடைபெறும் விஷயங்கள், படப்பிடிப்பு விஷயங்கள் மற்றும் தன்னைப் பற்றி விவரங்கள் அனைத்தையுமே www.actorsoori.com என்ற பெயரில் வலைதளம் ஒன்றை ஆரம்பித்து அதில் பதிவேற்றி வருகிறார் சூரி.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in