

தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்ற சசிகுமார் திங்கள்கிழமை பதவி யேற்றார்.
தமிழ், தெலுங்கு, மலை யாளம், கன்னடம் உள்ளிட்ட நான்கு மொழி திரைத்துறை உறுப்பினர்கள் கொண்ட தென்னிந் திய வர்த்தக சபை தேர்தல் சுழற்சி முறையில் இந்த ஆண்டு கேரள திரைத்துறைக்கு ஒதுக்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்தத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட சசிகுமார் வெற்றி பெற்றார்.
அவரை எதிர்த்து நின்ற விஜயகுமார் தோல்வி அடைந்தார். துணைத்தலைவர் பதவிக்கு போட்டியிட்ட செங் கையா, ராஜா, சுப்ரமணியன், விஜயகுமார் ஆகியோர் வெற்றி பெற்றனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய 4 மொழிகளையும் சார்ந்த தயாரிப்பாளர் சங்கம், விநியோகஸ்தர்கள் சங்கம், திரையரங்க உரிமையாளர் சங்கம், ஸ்டுடியோ அதிபர் சங்கம் சார்பில் செயற்குழு உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட்டனர்.
அவர்களில் டி.ஜி.தியாகராஜன், ஏ.எல்.அழகப்பன், ஐங்கரன் விஜயகுமார், ரவி கோட்டரகாரா, அழகன் தமிழ்மணி, என்.ராமசாமி உள்ளிட்ட 36 பேர் வெற்றிபெற்றனர். தலைவர் சசிகுமார் உள்ளிட்ட வெற்றிபெற்ற அனைவரும் திங்கள்கிழமை காலை தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் பதவி ஏற்றுக்கொண்டனர்.