தூய்மை இந்தியா திட்டத்தில் இணைந்தார் நடிகை த்ரிஷா

தூய்மை இந்தியா திட்டத்தில் இணைந்தார் நடிகை த்ரிஷா
Updated on
1 min read

பிரதமர் மோடி தொடங்கிவைத்த தூய்மை இந்தியா திட்டத்தில் இன்று (புதன்கிழமை) தன்னை இணைத்துக் கொண்டார் நடிகை த்ரிஷா.

ஸ்வச் பாரத் அல்லது தூய்மை இந்தியா என்ற பிரதமர் நரேந்திர மோடியின் புதிய விழிப்புணர்வை மக்கள் இயக்கமாக அவர் மாற்ற தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளார். இத்திட்டத்தில் பல்வேறு திரையுலகினர் இணைந்து வருகிறார்கள்.

பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று இத்திட்டத்தில் தன்னுடைய பிறந்த நாளன்று தன்னை இணைத்துக் கொண்டார் கமல்ஹாசன். இன்று த்ரிஷாவும் இத்திட்டத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.

சென்னை அருகே உள்ள முடிச்சூர் என்ற கிராமத்தில் ஒரு விலங்குகளுக்கான மையத்தில் சுகாதாரத்தை மேம்படுத்தும் பணியை சுற்றுச்சூழல் அமைப்பு ஒன்று மேற்கொண்டது. இந்நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு , தூய்மை இந்தியா திட்டத்தில் தன்னையும் இணைத்துக் கொண்டார் த்ரிஷா.

"இந்த பூமி நமக்கு மட்டுமே உரியது அல்ல. இதர ஜீவன்களும் நம்முடன் வாழ வேண்டும். அவை வாழ தகுதியான சுத்தமான, சுகாதாரமான சூழ்நிலையை அமைத்து தருவது நம் பொறுப்பு” என்று கூறினார் த்ரிஷா.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in