நடிகை அஞ்சலியுடன் ரகசிய திருமணமா?- நடிகர் சதீஷ் மறுப்பு

நடிகை அஞ்சலியுடன் ரகசிய திருமணமா?- நடிகர் சதீஷ் மறுப்பு
Updated on
1 min read

அஞ்சலியை நான் படத்தில் மட்டுமே பார்த்திருக்கிறேன். திருமணம் எல்லாம் நடைபெறவில்லை என்று நடிகர் சதீஷ் மறுப்பு தெரிவித்தார்.

'கலகலப்பு' படத்தைத் தொடர்ந்து மீண்டும் தற்போது தமிழ் சினிமாவில் 'மாப்பிள்ளை சிங்கம்', 'அப்பா டக்கர்' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் நடிகை அஞ்சலி. தமிழ், தெலுங்கு என மாறி மாறி நடித்து வருவதால், அஞ்சலி கால்ஷீட் டைரி எப்போதுமே ஃபுல்லாக இருக்கிறது.

சில மாதங்களுக்கு முன்பு ஆந்திர தொழிலதிபரை காதலிக்கிறார். விரைவில் திருமணம் என்ற செய்தி பரவியபோது "அப்படி எல்லாம் ஒன்றுமே இல்லை. அப்படி நடந்தால் நானே சொல்கிறேன்" என்று அஞ்சலி தெரிவித்தார்.

இந்நிலையில், இளம் நகைச்சுவை நடிகர் சதீஷ் உடன் அஞ்சலி நெருக்கம் காட்டி வருவதாகவும், ரகசிய திருமணம் செய்துக் கொண்டதாகவும் செய்திகள் பரவின.

இது குறித்து நடிகர் சதீஷை தொடர்புகொண்டு கேட்டபோது பதறியவர், "பாஸ்... எல்லாரையும் போல நானும் அஞ்சலியை படத்தில் மட்டுமே பார்த்திருக்கிறேன். இதுவரை நேரில்கூட பார்த்ததில்லை. அப்படியிருக்கும்போது எப்படி திருமணம் என்ற செய்தி வந்தது என்று தெரியவில்லை. அதெல்லாம் பொய் பாஸ்" என்று தெரிவித்தார் சதீஷ்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in