கோச்சடையான் உள்ளிட்ட 3 படங்களுக்காக ஆஸ்கர் தெரிவுப் பட்டியலில் ஏ.ஆர்.ரஹ்மான்

கோச்சடையான் உள்ளிட்ட 3 படங்களுக்காக ஆஸ்கர் தெரிவுப் பட்டியலில் ஏ.ஆர்.ரஹ்மான்
Updated on
1 min read

ஆஸ்கர் விருதுக்கான 'ஒரிஜினல் ஸ்கோர்' இசைப் பிரிவின் பரிந்துரைப் பட்டியலில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மீண்டும் இடம்பிடிக்க வாய்ப்பு நிலவுகிறது.

ஸ்லம்டாக் மில்லினர் படத்திற்கு இசையமைத்ததற்காக 2 ஆஸ்கர் விருதுகளை கடந்த 2009 ஆம் ஆண்டு ஏ.ஆர்.ரஹ்மான் வென்றார்.

இந்நிலையில், நடப்பு ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரைகளை இறுதி செய்வதற்கான 114 படங்கள் கொண்ட தெரிவிப் பட்டியலில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள மூன்று படங்கள் இடம்பெற்றுள்ளன.

ரஹ்மான் இசையமைத்துள்ள 'தி ஹண்ட்ரட் ஃபூட் ஜர்னி', 'மில்லியன் டாலர் ஆர்ம்' ஆகிய ஹாலிவுட் திரைப்படங்களுக்கும், ரஜினிகாந்தின் 'கோச்சடையான்' திரைப்படமும் என மூன்று படங்கள் இந்த பரிந்துரைக்கான தெரிவிப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

இதேபோல், இந்தி மொழியின் 'ஜல்' படமும், சிறந்த படத்துக்காக போட்டியிடும் 100 படங்களில் இடம்பெற்றுள்ளது. கிரிஷ் மாலிக் என்ற இயக்குநரின் முதல் திரைப்படம் இது. தண்ணீர் பஞ்சத்தை இப்படம் சித்தரிக்கிறது.

'ஜல்' திரைப்படத்தில் பாடிய பாடகர் சோனு நிகாம், இசைக் கலைஞர் விக்ரம் கோஷ் ஆகியோரும் ஆஸ்கர் விருதுக்கான தெரிவுப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

ஆஸ்கர் விருதுகளுக்காக பரிந்துரைப் பட்டியல், 2015 ஜனவரி 15ஆம் தேதி அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் அறிவிக்கப்படும். விருது வழங்கும் நிகழ்வு பிப்ரவரி 22-ல் நடைபெறும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in