

சிறந்த படம், இயக்குநர், ஒளிப்பதிவு, நடிகர் என நான்கு விருதுகளை, நார்வே திரைப்பட விழாவில் வென்றிருக்கிறது 'பரதேசி'
வருடந்தோறும் நார்வேவில் சிறந்த தமிழ் திரைப்படங்களுக்கு விருதுகளை வழங்கி கெளரவப்படுத்தி வருகிறார்கள். தொடர்ச்சியாக 5ம் ஆண்டை எட்டியிருக்கிறது நார்வே திரைப்பட விழா.
இந்தாண்டிற்கான விருதுகள் பட்டியலைப் வெளியிட்டு இருக்கிறார்கள். இதில் 'பரதேசி' திரைப்படம் 4 விருதுகளை வென்றிருக்கிறது.
விருதுகள் பட்டியல்:
சிறந்த படம் - பரதேசி
சிறந்த இயக்குநர் - பாலா (பரதேசி)
சிறந்த நடிகர் - அதர்வா (பரதேசி)
சிறந்த நடிகை - பூஜா (விடியும் முன்)
சிறந்த ஒளிப்பதிவாளர் - செழியன் (பரதேசி)
சிறந்த நகைச்சுவை நடிகர் - சூரி (வருத்தப்படாத வாலிபர் சங்கம்)
சிறந்த இசையமைப்பாளர் - ஏ.ஆர். ரஹ்மான் (மரியான், கடல்)
சிறந்த பாடலாசிரியர் - நா.முத்துகுமார்
சிறந்த பின்னணி பாடகர் - ஸ்ரீராம் பார்த்தசாரதி
சிறந்த பின்னணி பாடகி - சக்தி ஸ்ரீகோபாலன்
வாழ்நாள் சாதனையாளர் விருது - மனோரமா
பெரிதும் பாராட்டப்பட்ட படத்திற்கான விருது - ஹரிதாஸ் (இயக்குநர் பாலு மகேந்திரா விருது)
மிகப் பிரபலமான திரைப்படத்திற்கான விருது award - ராஜா ராணி (கே.எஸ்.பாலசந்திரன் விருது)