

கேரளப் பெண்களுடன் தோணி கள் ஒட்டி விளையாட விரும்பிய மகாகவி பாரதி பிறந்த தமிழ்நாட்டில் இப்படியொரு கதையுடன் ஒரு திரைப்படம் வருவது ஆச்சரி யமல்ல. கேரளப் பெண்கள் மட்டும்தான் அழகா என்று போர்க்கொடி தூக்குபவர்களும் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் சொன்னால் தலை தப்பிவிடும் என்று சாதூர்யமாக, நகைச்சுவை கலந்து திரைக்கதை அமைத்திருக்கிறார் எஸ்.எஸ் குமரன்.
தமிழரான கு. ஞானசம்மந்தம் கேரளப் பெண் ஒருவரைக் காதலிக்கிறார். அந்த காதல் தோல்வியில் முடிய, பிறகு குடும்பத்தினரின் வற்புறுத்தலினால், ரேணுகாவைத் திருமணம் செய்துகொள்கிறார். இவர்களுக்கு ஒரே ஒரு மகன். அவர்தான் படத்தின் நாயகன் அபி சரவணன்.
அப்பா ஞானசம்மந்தம், மலையாளப் பெண்ணைக் காதலித்ததில் மலையாள மண் மீதும் பாசம் வழிந்தோட அவரது வீட்டில், மலையாளச் சாப்பாடு, மலை யாளக் கடவுள், மலையாளப் பேச்சு, மலையாளம் வாசிக்கத் தெரியா விட்டாலும் மலையாளப் பத்திரிகை வாங்கிப் படம் பார்ப் பது என்று தனது வீட்டை ஒரு குட்டிக் கேரளமாகவே மாற்றி வைத் திருக்கிறார். அவரது ஒரே லட்சியம் தன் மகனுக்கு ஒரு மலை யாளப் பெண்ணைத் திருமணம் செய்து வைப்பது.இதற்கு முட்டுக்கட்டையாக வந்து நிற்கிறார் ஞானசம்பந்ததின் மனைவி ரேணுகா. அவரது பார்வையில் தமிழ்ப் பெண்போல உசத்தி யாரும் இல்லை.
இப்படி அப்பாவும் அம்மாவும் ஏட்டிக்குப் போட்டியாக மகனுக்கு பெண் பார்க்க, இடையில் மாட்டிக் கொண்ட சரவணன் அப்பாவின் அறிவுரையைக் கேட்டு கேரளா செல்கிறார். அங்கே மலையாளப் பெண்ணைக் காதலித்துத் திரு மணம் செய்துகொண்டாரா என்ற நகைச்சுவை ரகளைதான் படம்.
நகைச்சுவைக்கு அதிக இடம் தரும் கதைக் கருவை நகைச் சுவைச் சம்பவங்கள் மூலம் சொல்வதில் இயக்குநர் வெற்றி பெறவில்லை. பல காட்சிகள் அழுத்தம் குறைவாக உள்ளன. கதை நகர்வில் கற்பனை வறட்சி தெரிகிறது. கதாநாயகிகள் தேர்வில் இன்னும் மெனக்கெட்டிருந்தால் படத்தின் தலைப்புக்குக் கூடுதல் அர்த்தம் கிடைத்திருக்கும்.
அறிமுக நாயகனான அபி சரவணன் பக்கத்து வீட்டுப் பையனைப் போலப் பாந்தமாக இருக்கிறார். இயல்பாக நடிக்க வும் வருகிறது. காதலிக்கும் கலையில்தான் கொஞ்சம் வீக் காக இருக்கிறார். காயத்ரி, தீட்சிதா, அபிராமி ஆகிய மூன்று அறிமுக நாயகிகளும் கொடுத்த வேலையை குறைவில்லாமல் செய் திருக்கிறார்கள். ஒரு நாயகன் மூன்று கதாநாயகிகள் என்றாலும், படத்தின் முதன்மைக் கதாபாத்திரங்களைப் போல அபி சரவணனின் அப்பா அம்மாவாக நடித்துள்ள பேராசிரியர் கு. ஞான சம்மந்தம், ரேணுகா இருவரும் பட்டையைக் கிளப்பியிருக் கிறார்கள். கதாநாயகனுக்கு சந்தானமோ, சூரியோ நண்பனாக இல்லாத குறையை இவர்களே தீர்த்துவிடுகிறார்கள்.
எஸ்.எஸ். குமரன் இசையில் தேர்ச்சிபெற்றிருப்பதைப் பாடல்கள் சொல்கின்றன. ஆனால் காட்சிகளோடு அவற்றுக்கு இருக்கும் தொடர்பில் வலுவில்லை.
மிக மெல்லிய நகைச்சுவை மலையாளத்திற்கு இயல்பு... ஆனால் இங்கே?