தீபாவளி போட்டியில் விஜய் - விஜய் சேதுபதி படங்கள்

தீபாவளி போட்டியில் விஜய் - விஜய் சேதுபதி படங்கள்
Updated on
1 min read

2019 தீபாவளிக்கு விஜய் - அட்லீ இணையின் 'பிகில்' வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது விஜய் சேதுபதி - விஜய் சந்தர் இணையின் 'சங்கத்தமிழனு'ம் தீபாவளி வெளியீடாக அறிவிக்கப்படவுள்ளது.

'வாலு', 'ஸ்கெட்ச்' உள்ளிட்ட படங்களின் இயக்குநர் விஜய் சந்தர் இயக்கும் 'சங்கத் தமிழன்' படத்தில் விஜய் சேதுபதி, சூரி, ராஷி கண்ணா, நிவேதா பெத்துராஜ் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். விஜயா வாஹினி நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கிறது.

கமர்சியல் ஆக்‌ஷன் படமாக உருவாகும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதிக்கு இரட்டை வேடம். 'பிகில்' படத்திலும் விஜய்க்கு இரட்டை வேடம் என்று சொல்லப்படுகிறது. பண்டிகை தினங்களில் பெரிய நட்சத்திரங்களின் படங்கள் வெளியாகும்போது, மற்ற படங்கள் வெளியாவது அரிதே. எப்படியும் பெரிய நட்சத்திரங்களின் படங்களுக்குத்தான் சந்தையில் முக்கியத்துவம் தரப்படும் என்பதே காரணம்.

ஆனால் தற்போது, விஜய் - விஜய் சேதுபதி என தமிழ்நாட்டில் பிரபலமான இரண்டு நட்சத்திரங்களின் படமுமே தீபாவளி அன்று வெளியாகவுள்ளது. இந்த ஆண்டு பொங்கலுக்கு, அஜித்தின் 'விஸ்வாசம்' - ரஜினிகாந்தின் 'பேட்ட' என இரண்டு படங்கள் வெளியாகி இரண்டுமே வசூல் ரீதியாக வெற்றி பெற்றன. இதை மனதில் வைத்தே வரும் தீபாவளிக்கும் இரண்டு பெரிய நட்சத்திரங்களின் படங்களை வெளியிடலாம், இரண்டுமே வெற்றி பெற வாய்ப்புகள் உண்டு என சம்பந்தப்பட்டவர்கள் நம்புவதாகத் தெரிகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in