விக்ரம் 58 அப்டேட்: இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான் ஒப்பந்தம்

விக்ரம் 58 அப்டேட்: இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான் ஒப்பந்தம்
Updated on
1 min read

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் பெயரிப்படாத புதிய படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

'டிமான்ட்டி காலனி', 'இமைக்கா நொடிகள்' ஆகிய இரண்டு படங்களிலும் தனக்கென தனி முத்திரையைப் பதித்தவர் அஜய் ஞானமுத்து. இவர் இயக்கும் 3-வது படம் விக்ரமின் 58-வது படமாக உருவாகிறது. இதில் இசை அமைப்பாளராக ஏ.ஆர். ரஹ்மான் இணைந்துள்ளார்.

7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும், வியாகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் பெயரிடப்படாத இப்படத்தின் ஷூட்டிங் வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்குகிறது.  2020-ல் கோடை விடுமுறைக் கொண்டாட்டமாக இப்படம் வெளிவர இருக்கிறது.

மற்ற நட்சத்திரங்கள் யாரெல்லாம் இப்படத்தில் இருக்கிறார்கள் என்ற தகவலும் டெக்னிஷியன்ஸ் டீம் யார் யார் என்ற தகவலும் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.

தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் படம் தயாராக இருப்பதால் இந்திய சினிமாவில் இது மிக முக்கியமான படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in