கடும் போட்டிக்கு இடையே பிகில் தமிழக உரிமை விற்பனை

கடும் போட்டிக்கு இடையே பிகில் தமிழக உரிமை விற்பனை
Updated on
1 min read

கடும் போட்டிக்கு இடையே விஜய் நடிப்பில் உருவாகி வரும் 'பிகில்' படத்தின் தமிழக உரிமையை ஸ்கிரீன் சீன் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துவரும் படம் ‘பிகில்’. நயன்தாரா ஹீரோயினாக நடிக்கும் இந்தப் படத்தில், கதிர், ஜாக்கி ஷெராஃப், விவேக், யோகி பாபு, ரெபா மோனிகா ஜான், வர்ஷா பொல்லம்மா, இந்துஜா என ஏராளமான நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.

ஏஜிஎஸ் என்டெர்டெயின்மென்ட்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். வருகிற தீபாவளிக்கு இந்தப் படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகிவிட்டதால், படத்தின் விநியோக உரிமைகளைக் கைப்பற்றும் போட்டி நடைபெற்றது.

இதில் வெளிநாட்டு உரிமையை எக்ஸ் ஜென் ஸ்டூடியோ மற்றும் யுனைடெட் இந்தியா எக்ஸ்போர்ட்டர்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து கைப்பற்றியது. இதனைத் தொடர்ந்து தமிழக உரிமையைக் கைப்பற்ற பல்வேறு முன்னணி விநியோகஸ்தர்கள் போட்டியிட்டார்கள்.

இறுதியில் தற்போது பல படங்களை வெளியிட்டு வரும் ஸ்கிரீன் சீன் நிறுவனம், 'பிகில்' படத்தின் தமிழக உரிமையைக் கைப்பற்றியுள்ளது. இது தொடர்பாக ஏஜிஎஸ் நிறுவனத்தைச் சேர்ந்த அர்ச்சனா கல்பாத்தி தனது ட்விட்டர் பதிவில், “ஸ்கிரீன் சீன் நிறுவனம் பிகில் படத்தின் தமிழக விநியோக உரிமைகளை வாங்கியுள்ளது என்பதை அறிவிப்பதில் ஏஜிஎஸ் எண்டர்டெய்ன்மெண்ட் மகிழ்ச்சி கொள்கிறது. அவர்களுடன் நீண்ட, வெற்றிகரமான கூட்டினை எதிர்நோக்குகிறோம்” என்று தெரிவித்துள்ளார் அர்ச்சனா கல்பாத்தி

தற்போது 'பிகில்' படத்தின் படப்பிடிப்பு சென்னைக்கு வெளியே உள்ள கல்லூரி ஒன்றில் நடைபெற்று வருகிறது. இம்மாதத்துடன் அனைத்து காட்சிகளின் படப்பிடிப்பையும் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in