

அரசியலைப் பற்றி இப்போதைக்குப் பேச விரும்பவில்லை என்று கோவாவில் நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.
45-வது சர்வதேச இந்திய திரைப்பட விழா கோவாவில் இன்று தொடங்குகிறது. அமிதாப் பச்சன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ளும் இந்த விழாவில், இந்த ஆண்டின் சிறந்த திரை ஆளுமைக்கான சிறப்பு நூற்றாண்டு விருதை ரஜினிகாந்த் பெறுகிறார்.
இவ்விருதைப் பெறுவதற்காக ரஜினிகாந்த் தனது மனைவி லதாவோடு கோவா வந்தடைந்தார்.
இங்கு தொலைக்காட்சி நிருபர் ஒருவர், "'லிங்கா' திரைப்படம் வெளியாக இருக்கும் நேரத்தில், அரசியலுக்கு வருவது பற்றி பல்வேறு கேள்விகள் நிலவுகிறதே" என்ற கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த ரஜினிகாந்த், "அரசியல் குறித்து தற்போது எதுவும் பேச விரும்பவில்லை" என்றார்.
மேலும், திரைப்பட விழாவில் சிறப்பு விருதைப் பெறுவதில் பெருமிதம் கொள்வதாக ரஜினி தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.