சமூகத்தின் எதிர்ப்பு சக்தி பன்மடங்கு அதிகரித்திருக்கிறது: கபிலன் வைரமுத்து நேர்காணல்

சமூகத்தின் எதிர்ப்பு சக்தி பன்மடங்கு அதிகரித்திருக்கிறது: கபிலன் வைரமுத்து நேர்காணல்
Updated on
2 min read

‘கவண்’ படத்தின் மூலமாக கவிஞர் கபிலன் வைரமுத்து தமிழ் திரையுலகில் எழுத்தாளராக அறிமுகமாகிறார். கவிதை, சிறுகதை, நாவல், பாடல் வரிசையில் இப்போது கதை திரைக்கதை வசனமும் எழுதத் தொடங்கியிருக்கிறார். இந்தப் புதிய அவதாரம் குறித்து நம் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள்...

ஒரே படத்தில் கதை திரைக்கதை வசனம் மற்றும் பாடல்களை எழுதுகிறீர்கள். இதை உங்கள் எழுத்து பயணத்தின் உச்சக் கட்டம் என்று சொல்லலாமா?

அடுத்த கட்டம் என்று சொல்ல லாம். என்னுடைய பயணத்தில் இது இன்னொரு தொடக்கம். வெளிச்சம் நிறைந்த தொடக்கம்.

இயக்குநர் கே.வி.ஆனந்த்திடம் நீங்கள் கண்டது - கற்றது?

தொலைநோக்கோடு உழைப் பது. எதார்த்தமான விவாதம். படபடவென வெடிக்கும் கருத்து தைரியம். பட்டாம்பூச்சி போல் விரியும் காட்சி அழகியல். இதெல்லாம் நான் கண்டது. அதை கற்கும் பக்குவம் இன்னும் எனக்கு வரவில்லை.

உங்கள் ‘மெய்நிகரி’ நாவல்தான் ‘கவண்’ திரைப்படமா?

கே.வி.ஆனந்த் அவர்களுக்கு என் நாவலின் கதைக்களமும் பார்வையும் பிடித்திருந்தது. ‘மெய்நிகரி’யை அடிப்படையாகக் கொண்டு ஒரு படம் எடுக்கும் விருப்பம் அவருக்கு தோன்றி யது. நிறைய பேசினோம். அவரது எழுத்து கூட்டணியில் எழுத்தாளர்கள் சுபாவுடன் என்னையும் சேர்த்துக் கொண் டார். ‘கவண்’ படத்துக்காக நாங்கள் உருவாக்கிய கதை திரைக்கதையில் ‘மெய்நிகரி’யின் ஒரு சில அடிப்படைகளை மட்டும் பயன்படுத்தியிருக்கிறோம். கே.வி ஆனந்த் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

‘நம்ம மக்கள் கொஞ் சம் அதிகமாவே தூங்கு வாங்க - ஆனா முழிச் சுக்க வேண்டிய நேரத் துல கரெக்ட்டா முழிச்சிப்பாங்க’ - என்ற இந்தப் படத்தின் வசனம் பல கதைகளைச் சொல்கிறதே?

எழுத்தாளர் கள் சுபாவும் நானும் இணைந்து இந்த படத்தின் வசனங்களை எழுதியிருக்கிறோம். இதில் விஜய் சேதுபதி - விக்ராந்த் இருவரும் ஏற்றிருக்கும் கதாபாத்திரங்கள் என் தனிப்பட்ட இயல்போடு ஒன்றிப்போகும் பாத்திரங்கள். வசனம் எழுதும்போது அந்த கதாபாத்திரமாக மாற வேண்டிய அவசியமில்லாமல் நான் நானா கவே இருந்து எழுத முடிந் தது. டி.ஆர் அவர்களுக்கு வசனம் எழுதியது சுவாரசியமான அனுபவம்.

இந்த படத்தில் நீங்கள் எழுதி யிருக்கும் மூன்று பாடல்களில் உங்களுக்கு பிடித்தது?

‘மாத்துறாய்ங்களாம் எதையோ மாத்துறாய்ங்களாம். ஆளே இல் லாத கடையில டீய ஆத்துறாய்ங் களாம்.’

‘விவேகம்’ படத்தில் உங்களு டைய பங்களிப்பு என்ன?

எழுத்தாளராகவும் பாடலாசிரி யராகவும் பங்களித்து வருகிறேன்.தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

அப்பாவின் உயரம் உங்களுக்கு பாரமாக இருக்கிறதா?

வானம் பறவைக்கு பாரம் ஆகாது.

சில ஆயிரம் இளைஞர்களைக் கொண்டு கிட்டத்தட்ட பத்தாண்டு காலம் ஒரு இளைஞர் இயக் கத்தை நடத்திய அனுபவம் உங்களுக்கு உண்டு. சமீபத்திய போராட்டங்களைப் பற்றிய உங்கள் கருத்து?

வாடிவாசல் நெடுவாசல் நிகழ்வு களால் சமூகத்தின் எதிர்ப்பு சக்தி பன்மடங்கு அதிகரித்திருக்கிறது. பொழுதுபோக்கு சாதனங்களி லும் ஐ.பி.எல் மைதானங்களி லும் இளைஞர்களைப் புதைக்க நினைத்த முதலாளித்துவ அர சியலுக்கு இது பலமான சவுக்கடி.

நம் எதிரிகள் யார் என்ற விழிப்புணர்வை மெல்ல மெல்ல நாம் பெற்று கொண்டிருக்கிறோம். இது வளரும்.

கபிலன் வைரமுத்து

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in