

அஜித் அண்ணா மிகவும் பணிவானவர் என்று விவேக் ஒபராய் தனது ட்விட்டர் பக்கத்த்ல் தெரிவித்துள்ளார்.
சிவா இயக்கத்தில் அஜித் நடித்துவரும் படத்தின் படப்பிடிப்பு நீண்ட நாட்களாக சென்னை, ஹைதராபாத் மற்றும் பல்கேரியாவில் நடைபெற்றது. காஜல் அகர்வால், விவேக் ஒபராய், அக்ஷரா ஹாசன் உள்ளிட்ட ஒட்டுமொத்த படக்குழுவினரும் பல்கேரியா படப்பிடிப்பில் கலந்து கொண்டார்கள்.
இப்படப்பிடிப்பில் பைக் துரத்தல் காட்சிகளில் டூப்பின்றி சில காட்சிகளில் நடித்து படக்குழுவினரை வியப்பில் ஆழ்த்தியுள்ளார் அஜித். 'விவேகம்' என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இணையத்தில் வெளியிட்டது படக்குழு. இதற்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
விரைவில் தொடங்கவுள்ள இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பை முடித்து, இறுதிகட்ட பணிகளில் கவனம் செலுத்தவுள்ளது படக்குழு. ஜூனில் இப்படத்தை வெளியிட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில் விவேக் ஒபராய், "அஜித் அண்ணா மிகவும் பணிவான, பிறர் மீது அக்கறை இருக்கும் மனிதர். சுத்தத் தங்கம். சென்னையில் இத்தனை பேரின் அன்புக்கு மத்தியில் இருக்கும் ஒவ்வொரு நிமிடத்தையும் ரசிக்கிறேன். அனைவரது அன்புக்கும் நன்றி" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.